மக்களவையில் 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் இடை நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மக்களவையில் 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் இடை நீக்கம்

புதுடில்லி, ஜூலை 26- விலை வாசி உயர்வு, சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவைத் தலைவரை முற்றுகையிட்டு அவையின் மய்யப்பகுதி யில் கூடி முழக்கங்கள் எழுப்பிய ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ், டி.என்.பிரதா பன் ஆகிய 4 காங்கிரஸ் உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து மக்களவைத் தலைவர் உத்தர விட்டுள் ளார். மழைக் கால கூட் டத் தொடர் முழுவதும் இவர்கள் அவை நடவ டிக்கையில் ஈடுபடக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறி யுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கத்திற்கு திமுக நாடா ளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் 4 உறுப் பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழு துமே நடக்காத ஒன்று.

இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த இடை நீக்கம் கண்டனத் திற்குரியது” என்று திமுக நாடாளுமன்ற குழு தலை வர் டி.ஆர். பாலு கண்ட னம் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் எங்கள் பேச்சுரிமையை நசுக்கியுள்ளனர், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு குரலே ஒலிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார் கள். எங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சென்று சொல்வது” என்றும் கூறியுள்ளார். முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து மக்கள வையில் முழக்கம் எழுப் பியதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி மணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என். பிரதாபன் ஆகியோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பி னர்கள் யாரும் பதாகை கள் கொண்டு வர அனு மதிக்கப்பட மாட்டார் கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment