40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

 


திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராசன் அவர்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சந்தித்து 'விடுதலை' சந்தா புத்தகத்தினை வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், மாவட்டச் செயலாளர் ரமேஷ், உதயகுமார், அருள், முருகன், இரணியன் உள்ளனர். (கும்மிடிப்பூண்டி 10-07-2022)
-----------
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13.7.2022 அன்று மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட  செயலாளர் அ.அருணகிரி, மண்டலத் தலைவர் மு.அய்யனார்,ஆகியோர் முன்னிலையில் தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகரிடம் 30 விடுதலை சந்தாக்களுக்கான புத்தகம், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச. கண்ணனிடம் 20 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், திருவையாறு ஒன்றியச் செயலாளர் துரை.ஸ்டாலின் அவர்களிடம் 20 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், திருவையாறு ஒன்றியப் பெருந்தலைவர் அரசாபகரன் 1 ஆண்டு சந்தா. மேலும் 40 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் குமாருக்கு 10 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சித்திரக்குடி பொறியாளர் சு.பழனிராஜனுக்கு 10 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், தஞ்சை வடக்கு ஒன்றிய அமைப்பாளர் கள்ளப்பெரம்பலூர் சுந்தரமூர்த்திக்கு 10 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம், தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தஞ்சை களிமேடு து.செல்வனுக்கு 10விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம் ஒப்படைக்கப்பட்டது.
----------
தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மண்டலசெயலாளர் மு. அய்யனார், மாவட்ட  செயலாளர் அ.அருணகிரிமாவட்டதுணைச் செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் முன்னிலையில் தஞ்சை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சூரக்கோட்டை இரா.சேகர் - சுமதி ஆகியோர் ஒரு ஆண்டு சந்தா வழங்கினர் 10 சந்தாவுக்கான புத்தகங்கள், தஞ்சை பொறியாளர்கள் கோ.இரவிச்சந்திரன், கீதப்பிரியா, மணிமேகலை சுப்பையா ஆகியோருக்கு 20 சந்தாவுக்கான புத்தகங்கள், தஞ்சை டாக்டர் தமிழ் மணி குடும்பத்திற்கு 20 சந்தாவுக்கான புத்தகங்கள், அம்மாப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன்  ஒரு ஆண்டு சந்தா மற்றும் 50 சந்தாவுக்கான புத்தகங்கள், தஞ்சை ஒன்றிய பெருந்தலைவர் சூரக்கோட்டை வைஜெயந்திமாலா கேசவன் ஒரு ஆண்டு சந்தாவை வழங்கி,  50 சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெற்றுக்கொண்டனர். (12.7.2022).
----------
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி-மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா வெற்றிக்குமார் ஆகியோரிடம் 30 சந்தாவுக்கான புத்தகங்கள், அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் கி. ஜவகர், ஒன்றிய துணைத்தலைவர் வை.இராஜேந்திரன், சாலியமங்கலம் நகரத் தலைவர் துரை. அண்ணாத்துரை ஆகியோரிடம் 20 சந்தாவுக்கான புத்தகங்கள், சாலியமங்கலம் மகான்பாவா மாடர்ன் ரைஸ்மில் உரிமையாளர்.முகமதுஅபூப் - அவரது மகன் பாசில் ஆகியோர் விடுதலை 10 ஆண்டு சந்தா தொகையை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், (12.7.2022).
----------------
பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழிக்கு 10 சந்தாவுக்கான நன்கொடை புத்தகத்தையும், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஜெயராமன் 1 விடுதலை சந்தா, மேனாள் தஞ்சை நகர செயலாளர் கரந்தை முருகேசன் இணையர் விஜயலெட்சுமியிடம் 1 விடுதலை ஆண்டு சந்தா, மாநகர துணைச் செயலாளர் பழக்கடை கணேசனிடம் 10 விடுதலை  சந்தாக்களுக்கான புத்தகம்,  மேனாள் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமியின் மகன் கு.பன்னீர்செல்வத்திடம் 10 விடுதலை சந்தாக்களுக்கான புத்தகத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், (12.07.2022)
------------
தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதனிடம் விடுதலை  சந்தாக்களுக்கான நன்கொடை புத்தகம்,  பிச்சாண்டார் கோவில் பி.வி.ராமச்சந்திரனின் மகன் பேராசிரியர் பிவிஆர் வீரமணியிடம் 10 விடுதலை  சந்தாக்களுக்கான நன்கொடை புத்தகங்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், (12.07.2022)
---------------
திருவல்லிக்கேணி திமுக பகுதி கழக செயலாளரும் 116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்சி துணைத் தலைவருமான ஏ.ஆர்.பி.எம். காமராஜ் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்த சாரதியிடம் விடுதலை நாளேட்டிற்கு அய்ந்து அரையாண்டு சந்தா வழங்கினார்.
------------
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்  ம.பிரபாகரன் ஓராண்டு விடுதலை சந்தாவும் அரியலூரில் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநாட்டிற்கு நிதியும் கொடுத்தார். மாவட்டத் தலைவர் தங்கராசு, பகுத்தறிவாளர்கள் தலைவர் நடராசன் பெரியார் பெருந்தொண்டர் சின்னசாமி உடன் உள்ளனர்.
--------
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன்  தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன், கழக தொழிலாளரணி மாநில தலைவர் மு.சேகர், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், பெ.கலைவாணன்  ஆகியோர் 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள்  திரட்டித் தர வேண்டிய அவசியத்தைப் பற்றி உரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன்-மாநில மகளிர் அணி பொருளாளர் அகிலா இணையரின் 31ஆவது மண நாளை முன்னிட்டு இருபத்தி அய்ந்து ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்கள். மகன் மண்டல இளைஞரணி  செயலாளர் எ.சிற்றரசு,  மருமகள் சபரிதா,  பேரன் இன்பா உடன் உள்ளனர். 
---------
கன்னியாகுமரி மாவட்ட  கழக தோழர் வெட்டூரணிமடம் ம.செல்வராசு. மேலராமன்புதூர் பகுதி கழக கிளைக் கழக செயலாளர் பி.கென்னடி, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன தலைவர் எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரிமாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர்.
--------
கழக திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் நா.கலியபெருமாள்  81ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு (14.7.2022) அய்ந்து ஓராண்டு ‘விடுதலை' சந்தா ரூ.10,000 நன் கொடையாக தமிழர் தலைவர் அவர்களிடம் க.கஸ்தூரிபாய், சரவணன், சித்ரா, பூபாலன் குடும்பத்தினர் வழங்கினர்
--------
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர திமுக செயலாளர் வழக்குரைஞர் எஸ்.பி.டி.வில்சன் ஆலங்குளம் பொது நூலகத்திற்கு ஒரு விடுதலை சந்தா கொடுத்தார்/ தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தாக்கள் 5 கொடுத்தார். உடன் பெரியார் குமார்,செந்தில்குமார் மற்றும் ஞானராஜ் (11-07-2022.)
--------
தருமபுரி .காரிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பி. சி .ஆர்.மனோகரன் விடுதலை சந்தா புத்தகம் ஒன்றினை மாநில அமைப்பு செயலாளரிடம் பெற்றுக் கொண்டார் - வாழ்நாள் சந்தா  வழங்குவதாக ஒப்புக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் மு. பரமசிவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ம.செல்லதுரை, வீ.சிவாஜி, த.திலீபன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.











No comments:

Post a Comment