தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை மய்யம் தகவல்

சென்னை, ஜூலை 18 மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கோடை வெயிலின்  தாக்கம் குறைந்து தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேல்பவானி, அவலாஞ்சி 70 மி.மீ. பெய்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், நடுவட்டம், கடலூர் 60 மி.மீ., சின்னகல்லார், வால்பாறை 50 மி.மீ., பந்தலூர் 40 மி.மீ., சென்னை அயனாவரம், ஆவடி 20மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக   21ஆம் தேதி வரை,  தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும்.


No comments:

Post a Comment