இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் 1,31,714 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் 1,31,714 பேர் உயிரிழப்பு

சென்னை, ஜூலை 18 இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 3,66,138 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டிய 32,873 பேர் பலியாகியுள்ளனர். இது ஒன்றிய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில் கீழ் 29.07 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடிப்பதில் அலட்சியம் காட்டுகின் றனர். குறிப்பாக அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு பயணிப்பது, அதி வேகத்தில் செல்வது, சிகப்பு விளக்கை மதிக்காதது போன்ற காரணங்களால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

அப்போது கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே சில நேரங்களில் அலட்சியத்தின் காரணமாக விலை மதிப்பற்ற உயிரையும், அவர்கள்  இழக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டில் 3,66,138 சாலை விபத்துக்கள் நடத்துள்ளன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அதிகப்படியான விபத்து தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் நடந்துள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,16,496 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 47,984  பேர் உயிரிழந்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைகளில் மொத்தமாக 90,735  விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 33,148 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிற சாலைகளில் 1,58,887 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில்  50,582 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் அதிகபட்ச  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 3,66,138 சாலை விபத்துக்கள் நடத்துள்ளன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் தான்  அதிக அளவில் விபத்துக்கள் நடந்துள்ளன. அதாவது இந்தியாவின் மொத்த சாலை நீளம் சுமார் 63 லட்சம் கி.மீக்கு மேல் உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள்  சுமார் 1.32 லட்சம் கி.மீ, மாநில நெடுஞ்சாலைகள் சுமார் 1.80 லட்சம்  கி.மீக்கு மேல் உள்ளது. பிற சாலைகள் சுமார் 60.59 லட்சம் கி.மீ அளவில் உள்ளது. இதில் வளைவான, அகலம் குறைந்த இடங்களில் அதிக விபத்துக்கள்  நடந்துள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்த 3,66,138 சாலை விபத்துக்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 1,16,496 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 47,984 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைகளில் 90,735 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 33,148 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேபோல் பிற சாலைகளில் 1,58,887 விபத்துக்கள் நடந் துள்ளன. இதில் 50,582 பேர் பலியாகி யுள்ளனர். குறிப்பாக அதிவேகமாக பயணித்ததால் 85,616 விபத்து ஏற்பட் டுள்ளது. இதில் 32,873 பேர் உயிரிழந் துள்ளனர். போதையில் வாகனம் ஒட்டி யதால் 3,416 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 1,862 பேர் உயிரிழந்துள்ளனர். அலைபேசியில் பேசிக்கொண்டு வாக னம் ஓட்டியதால் 2,697 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 1,389 பேர் உயிரி ழந்துள்ளனர். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment