தேசிய கல்வி : தரவரிசைப் பட்டியல் 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

தேசிய கல்வி : தரவரிசைப் பட்டியல் 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடம்

சென்னை, ஜூலை 17 தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ் நாடு முதல் இடத்தை பிடித் துள்ளது. 

ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.அய்.ஆர்.எப்.) மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டி யலை 5.6.2022 அன்று வெளியிட்டது. 

இதில் ஒட்டுமொத்த தரவரி சையில் சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனம் 4-ஆவது முறை யாக முதல் இடத்தை பெற்று இருந்தது. இதேபோல், பல்கலைக் கழகம், கல்லூரி, பொறியியல் மேலாண்மை, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம், ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பிரிவுகளிலும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சிறந்த கல்வி நிறு வனங்களாக வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில், எந் தெந்த மாநிலங்களில் அதிக கல்வி நிறுவனங்கள் வருகின்றன? என்ற புள்ளிவிவரத்தைக் கொண்டு, மாநிலங்களின் தரவரிசையும் தற்போது வெளியிடப்பட்டுள் ளது. 

இந்த வரிசையில் தமிழ்நாடு 163 கல்வி நிறுவனங்களுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 2-ஆவது இடத்தை 93 கல்வி நிறுவனங் களுடன் டில்லியும், 3-ஆவது இடத்தை 88 கல்வி நிறுவனங் களுடன் மராட்டியமும் பிடித்துள் ளன. அதனைத்தொடர்ந்து முறையே கருநாடகா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், அசாம், ஜார்க் கண்ட், சண்டிகர், இமாசலப்பிர தேசம், புதுச்சேரி ஆகிய மாநி லங்கள் இடம் பெற்றுள்ளன.


No comments:

Post a Comment