பத்திரப் பதிவுத்துறை சாதனை 103 நாள்களில் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

பத்திரப் பதிவுத்துறை சாதனை 103 நாள்களில் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி

சென்னை, ஜூலை 14 தமிழ் நாட்டில் 100 நாட்களில் ரூ.4,988.18 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

மாநில சொந்த வரி வருவாயில் பெரும்பங்கை வகிப்பது பத்தி ரப்பதிவு மற்றும் வணிகவரித் துறைகளாகும். இதில் பதிவுத் துறையில், கணினிமயமாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பதிவு எண்ணிக் கையும் உயர்ந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்கள் பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்தப்படுவதா லும், பழைய ஆவணங்கள் அனைத் தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தாலும், வில்லங்கச் சான்று, பத்திர நகல்பெறுவது உள்ளிட்டவை எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.

இதனால் பதிவுத்துறை வரு வாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர, சமீபத்தில் தத்கல் முறையில் கூடுதல் கட்ட ணம் செலுத்தி பதிவு செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்.1ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையிலான 103 நாட்களில் பத்திரப் பதிவுத் துறையின் வருவாய் ரூ.4,998.18 கோடியாக பதிவாகி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021இல் இதே காலகட்டத்தில் ரூ.2,577.43 கோடி யாக வருவாய் இருந்தது. இந் தாண்டு அதைவிட கூடுதலாக ரூ.2,410.75 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021- - 2022ஆம் ஆண் டுக்கு வருவாய் இலக்காக ரூ.13,2 52.56 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலை யில், ரூ.13,913.65 கோடி வருவாய் ஈட்டியது. இது, பத்திரப் பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாகும். தற்போது, ஏப்.1 முதல் ஜூலை 12வரையிலான 103 நாட்களிலேயே ரூ.5 ஆயிரம் கோடி வருவாயை எட்டியுள்ள தால், இந்தாண்டு இலக்கைத் தாண்டி வருவாய் உயரும் என்று பதிவுத் துறையினர் தெரி வித் துள்ளன


No comments:

Post a Comment