முன்பு இருந்த மதுரை ஆதீனத்தைக் காப்பாற்றியது திராவிடர் இயக்கம் என்பதை மறந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

முன்பு இருந்த மதுரை ஆதீனத்தைக் காப்பாற்றியது திராவிடர் இயக்கம் என்பதை மறந்து

யாருடைய வில்லுக்கோ இன்றைய மதுரை ஆதீனம் அம்பாகி இருக்கின்றார்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

உசிலம்பட்டி, ஜூன் 9 முன்பு இருந்த மதுரை ஆதீனத்தை- திராவிடர் இயக்கம்தான் காப்பாற்றியது என்கிற வரலாற்றை இன்றைய ஆதீனம் மறந்துவிட்டிருக்கிறார். அவருடைய கடையாணியை, அவரே கழற்றிக் கொண்டிருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (8.6.2022) உசிலம்பட்டிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித் தார்.

அவ்விவரம் வருமாறு:

மதுரை ஆதீனம் 

பேசியிருப்பதுபற்றி...

செய்தியாளர்: மதுரை ஆதீனம் பேசியிருப்பது குறித்து...?

தமிழர் தலைவர்: பொதுவாக திரா விடர் இயக்கம் இல்லையானால், ஆதீ னங்களே இருக்க முடியாது. இந்த வரலாறு புதிதாகப் பொறுப்பேற்று வந் திருக்கக்கூடிய மதுரை ஆதீனத்துக் காரர்களுக்குத் தெரியாது.

சூத்திரர்கள் சந்நியாசியாக உரிமையில்லை என்பது உச்சநீதிமன்றத்தினு டைய தீர்ப்பு. அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், ஆதீனங்களை அங்கீகரித்து இருப்பதே இந்த அரசு தான் - காரணம் கலைஞர் அரசு - இது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருக் கின்ற அரசு என்று சொன்னார்.

அதைப்பற்றியெல்லாம் புரிந்துகொள்ளாமல், யாருடைய வில் லுக்கோ இவரை அம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் தன்னுடைய உணர்வுகளுக்குத் திரும்ப வேண்டும் - திரும்புவார்.

முன்பு இருந்த மதுரை ஆதீனத்தை திராவிடர் இயக்கம்தான் -   அந்த ஆதீ னத்தையே காப்பாற்றியது என்கிற வர லாற்றை அவர் மறந்துவிட்டிருக்கிறார்.

எனவேதான், அவருடைய கடை யாணியை, அவரே கழற்றிக் கொண்டி ருக்கிறார்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

No comments:

Post a Comment