பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் மசோதா மக்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் மசோதா மக்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியது

புதுடில்லி, ஆக.11 இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியது. இடஒதுக் கீட்டு உச்சவரம்பை நீக்க தி.மு., காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் (.பி.சி.) எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் அளிப்பதற்கான 127ஆவது அரசமைப்பு சட்ட திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது. இம்மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்கள வையில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், மக்களவையில் நேற்று (10.8.2021) இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. அப்போது, பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைதியாக இருக்கைக்கு திரும்பி, விவாதத்தில் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத்தொடரில், இந்த மசோதா மீது மட்டுமே அமைதியாக விவாதம் நடந்தது. ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா, வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மசோதாவால் 671 ஜாதிகள் பலனடையும் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விவாதத்தை தொடங் கினார். அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவை காங்கிரஸ் முழுமன தாக ஆதரிக்கிறது.

பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. அதே சட்டபூர்வ உரிமையை மற்ற மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். மாநிலங்களுடன் பேசி, 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும்.

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு மசோதா கொண்டு வந்ததுபோல், இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க மசோதா கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.. சார்பில் பேசிய டி.ஆர்.பாலுவும் இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), லாலன்சிங் (ஐக்கிய ஜனதாதளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ்) ஆகிய உறுப்பினர்களும் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டனர்.

அப்னா தளம் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய அமைச்ச ருமான அனுப்ரியா படேல், அகில இந்திய  மஜ்லிஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசி ஆகியோரும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அனுப்ரியா, ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தாழ்த்தப்பட் டோர் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு ஒவைசி கோரிக்கை விடுத்தார். சிவசேனா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவாதம் முடிந்தநிலையில், நேற்று (10.8.2021) இரவு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது.

386 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேறியது.

No comments:

Post a Comment