Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் விடுக்கும் வினா! (871)
ஜாதி மதம், பழக்க வழக்கம், சாத்திரம், கடவுள், கட்டளை ஆகியவற்றின் பேரால், லாபமும், மேன்மையுமே அடைந்து வருவதன்றி பிரபுக்களுக்கும், பண்டிதர்களுக் கும், வியாபாரிகளுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும்,  - யாதொரு கெடுதியாவது உண்டா? கஷ்டமோ - நட்டமா என ஏதாகிலும் உண்டா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி…
December 30, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (870)
மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங் குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் - இவைகள் நமக்குக் கடவுளை விட மேலானவையல்லவா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 29, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (870)
கடவுளைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருந்தாலும் - கோவிலும், பூஜையும், உற்சவமும் தேவையா? அவசியமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 27, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (869)
ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பார்ப்பனர்களுக்குப் பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? ஜாதி வேறுபாடு காண்பவன் - ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத் தானே தவிர வேறு எதற்காக? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 25, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (868)
தேவர்களுக்குத் தவ வலிமை இருந்ததாகக் கூறுகின்றவர்கள் - அத் தேவர்களில் எத்தேவரிட மாவது ஒழுக்கம் - நாணயம் இருந்திருக்கிறது என்பதற்கு எதையாவது உதாரணமாகக் கூற முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 23, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (867)
பிரபல கடவுள் இராமன் ஆற்றில் விழுந்து செத்தவனாவான்! அவன் மனைவி இராட்சதனைப் புணர்ந்து கர்ப்பமானவள்! அடுத்த பிரபல கட வுளான கிருட்டிணன் வேடனால் வில்லடிப்பட்டுச் செத்தான். அவன் செய்யாத அயோக்கியத்தனம் உலகில் இதுவரை யாராலும் செய்யப்பட்டதுண்டா? சிருட்டிக்கப்பட்டுள்ளதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணின…
December 22, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (866)
பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்து கிறார்கள். அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில் தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவது மூலம் பார்ப்பானை மேல்ஜாதியென்றும், தங்களை கீழ் ஜாதியென்றும் ஒப்புக் கொள்கிறானா - இல்லையா? இழிவு ஒழிய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இப்படிச…
December 21, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (865)
என்னைப் பொறுத்தவரையில் நான் இதைச் சுதந்திரம் என்று சொல்லமாட்டேன். மற்றென்ன வென்றால் அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று சொல்வதில் என்ன தவறு? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 20, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (864)
ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர் களில்லை என்று சொல்லி வருவது போல் - தங்களுக்குக் கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; அப்படிக்கில்லாமல், சமூக ஒற்றுமையை நிலை நிறுத்த வேறு என்னதான் வழி? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 19, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (863)
கண்டவன் வீட்டில் கொள்ளையடியுங்கள், தட்டிக் கேட்டால் குத்திக் கொலை செய்யுங்கள் என்பதற்கும், இந்தச் சங்கராச்சாரிகள் ‘ஜாதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; எவனாவது கீழ் ஜாதிக்காரன் தொட்டுவிட்டால் உடுத்தின வேட்டியுடன் ஸ்நானம் செய்து கொண்டு மந்திரம் செபியுங்கள் என்பதற்கும் என்ன பேதம்? - தந்தை பெரியார்,  &#…
December 18, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (862)
இந்நாட்டுக் கல்வியின் பயனாய் வாழ்க்கையின் எந்தத் துறையிலும் பழைமையிலிருந்து எவ்வித மாறுதலோ, எவ்வித சவுகரியமோ, முன்னேற்றமோ ஏற்பட்டுள்ளதா? ஏதாவது ஏற்பட்டிருந்தால் அது புரட்சியின் பயனாலேயே ஒழிய, கல்வியால் ஏற்பட்டதாகுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 17, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (861)
நம்மை முன்னேற விடாமல் தாழ்த்தி அடிமைப் படுத்தி வைத்திருக்கிற காரியத்தைத் தவிர வேறு எதற்கு ஜாதி பயன்படுகிறது? இப்படி நமக்குக் கேடான இழிவான ஜாதி எதற்கு இருக்க வேண்டும்? இது நீக்கப்பட வேண்டும் என்றால் ‘இது மூலாதார உரிமை, அதில் கை வைக்கக்கூடாது' என்று ஆட்சி யாளர் கூறினால் அந்த ஆட்சியை விட்டு விலகிக…
December 16, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (860)
நாம் அரசியலில் எவ்வளவுதான் சுதந்திரம் பெற்று விட்டாலும், அறிவில், உலக வளர்ச்சித் தன்மையில் மேம்பாடு அடையாவிட்டால் பெற்ற சுதந்திரம் எதற்குப் பயன்படும்? ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஜெயிலுக்குப் போகவும், அதற்குப் பண்ட மாற்றாகப் பதவி பெறவும் தானே பயன்படும்? இந்த நிலை குறிப்பிட்ட தனி மனிதனுக்குப் பயன்படலாம…
December 15, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (859)
தங்கச் சொம்பு, வெள்ளிச் சொம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள், சமாராதனைகள், சாந்திகள் முதலிய காரியங்களில் ஆகும் செலவுகள், இதுகள் எத்தனை கோடி? இந்தச் செலவுகள் ஒரு புறம் நம்மைப் பிய்த்துப் பிடுங்கித் தின்னவும், இதன் மூலம் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதை எவ்வளவு பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழ்கிற…
December 14, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (858)
கடவுள் ஒன்றா? பலவா? பல இருந்தாலும் அவைகளுக்குப் பிறப்பு - இறப்பு உண்டா? உண்டானாலும் அவை விபச்சாரத்தனம், கொலை, வஞ்சகம், பொய், களவு, மோசடி ஆகிய காரியங்கள் செய்யுமா? அப்படிச் செய்த அந்தப்படியான காரியங்களை மதச் சம்பிரதாயமாகக் கொள்ளுவது அறிவும், மானமும் உள்ள செயலாகுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் க…
December 13, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (857)
நம்முடைய கடவுள்கள் என்று செல்லப்படும் பிரம்மா, விட்டுணு, சிவன் முதலியவைகள் கூட விபச்சாரத் தோசத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளதா? அவர்களின் பெண் ஜாதிமார் களைக் கூட விபச்சாரத் தோசத்திலிருந்து விலக்கி யுள்ளார்களா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 12, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (855)
கடவுளின் பேரால் - மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச் சாறு முதலியவைகளைக் கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டிச் சாக்கடைக்குப் போகும்படிச் செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? அறிவுடைமையாகுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 11, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (855)
உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகுமா? - தந்தை பெரியார்…
December 10, 2022 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (854)
மனிதன் இயற்கையில் சுயநலம் உடையவன். மனிதன் தன்னலம் விட்டுப் பொதுத் தன்மைக்குப் பாடுபடுவது மிகமிக அரிதல்லவா? சுயநலம் இல்லாவிட்டால் மனிதன் ஒரு சீவனாகவே இருக்க முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 09, 2022 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (853)
மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
December 08, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn