புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம் திருமணங்கள் நடைபெறுவதைக் காணலாம். இன்று கலப்பு மணங்கள் இரண்டொன்று நடந்த…