மக்கள் கவலை நீங்க நமது 'அரசியல் வாழ்வு' என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். ('விடுதலை' 6.7.1972) February 21, 2023 • Viduthalai
பெண்ணை பெற்றோர் கடமை உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. 'திருமணத்தில் இஷ்டம்' என்றால் - நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள். 'பொதுச் சேவையில் பிரியம்' என்ற… February 20, 2023 • Viduthalai
இது ஏழை நாடா? இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி? 'விடுதலை' 9.12.1944 February 18, 2023 • Viduthalai
புத்தன் புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை 'விடுதலை' 16.5.1961 February 17, 2023 • Viduthalai
தேர்தல்வாதிகள் மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்களை அவர்களது பேச்சினால் எழுத் தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களின் நண்பர்கள் யார்? அவர்களின் எதிரிகள் யார்? என்… February 16, 2023 • Viduthalai
இது ஏழை பிசாசுகள் ஆட்சியா? இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த்திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்', -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் … February 15, 2023 • Viduthalai
ஆண்களின் சூழ்ச்சி ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் … February 14, 2023 • Viduthalai
உண்மையான வீரன் 'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான். … February 13, 2023 • Viduthalai
எது சரியான வழி? சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? 'குடிஅரசு' 14.7.1945 February 11, 2023 • Viduthalai
வக்கீல் முறையின் கேடுகள் இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது.… February 10, 2023 • Viduthalai
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? 'குடிஅரசு' 7.4.1929 February 09, 2023 • Viduthalai
விதவைகளால் வருவது விபசாரம் விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத்தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். 'குடிஅரசு' 28.4.1935 February 08, 2023 • Viduthalai
மொழி உணர்ச்சிக்கு இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் உடலில் ஓடும் பார்ப்பன மதவுணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும். (பெரியார் 74ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.32) February 06, 2023 • Viduthalai
ஆளுவோரின் பயம் அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர் களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு - தாழ்வு இ… February 04, 2023 • Viduthalai
பகுத்தறிவாளர் கடமை நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும். 'உண்மை' 15.9.1976 February 03, 2023 • Viduthalai
பொருளாதாரக் கேடு சடங்கு, பண்டிகை, உற்சவம் இம் மூன்றும் மக்களைப் பொருளாதாரத் துறையில் அடிமையாக்கி வைப்ப தற்காகவே இருந்து வருகின்றன. 'குடிஅரசு' 3.11.1929 February 02, 2023 • Viduthalai
அநீதிக்குக் காரணம் இந்நாட்டில் அநீதியும், நாணயக்குறைவும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130) February 01, 2023 • Viduthalai
பத்தினி - பதிவிரதை பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. 'விடுதலை' 4.5.1973 January 31, 2023 • Viduthalai
முன்னேற்றத் தடைகள் தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறிகளுக்கும், பார்ப்பனர் களுக்குமே போய்விடு கிறபடியால் இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை. 'பகுத்தறிவு 1.5.1936 January 30, 2023 • Viduthalai
மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்ட வர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவி… January 29, 2023 • Viduthalai