முன்னேற்றத் தடைகள் தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறி களுக்கும், பார்ப்பனர்களுக்குமே போய் விடுகிற படியால், இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை. 'பகுத்தறிவு' 1.5.1936 November 11, 2022 • Viduthalai
மதமும் - தீண்டாமையும் உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவகாருண்யத்தையும், எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய, அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50) November 10, 2022 • Viduthalai
எது தகுதி - திறமை? பதவிக்குத் தகுதி - திறமை என்பது, பொது ஒழுக்கம், பொது அறிவு, பரம்பரை நல்ல குணங்கள், மக்களைச் சமமாகக் கருதும் பொது நேர்மை, வஞ்சகம், பொய், களவு, சூது, கொலை என்ற பஞ்சமா பாதகம் என்னும் படியான குணங்களை வெறுக்கக்கூடிய தன்மை, நாணயம் முதலியவை இருக்க வேண்டும். (பெரியார் 87ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.… November 09, 2022 • Viduthalai
நல்லாட்சி நடக்க பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும் கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால், அரசர்களையும், கடவுள்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காண முடியும்; காண முடிந்திருக்கிறது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்) November 08, 2022 • Viduthalai
தர்மம் என்பது கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது. 'குடிஅரசு' 3.11.1929 November 07, 2022 • Viduthalai
இந்திய ஜனநாயகம் இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.169) November 05, 2022 • Viduthalai
தகுதி - திறமை ஒரு சூழ்ச்சி அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க, அழுத்த, கீழ்த்தரமாக செய்யப்படும் சூழ்ச்சி -த… November 03, 2022 • Viduthalai
பகுத்தறிவாளர் கடமை நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும். 'உண்மை' 15.9.1976 November 02, 2022 • Viduthalai
திராவிடர் நிலை மாற "நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் 'திராவிடர்' என்றும், 'இந்தியா', 'இந்து' 'இந்தியர்' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும். 'கு… November 01, 2022 • Viduthalai
அறிவில்லாததால்... இந்திய ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும், சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும், சமூக இயல் வேறாகவும் இருந்து வர முடிகின்றது. 'குடிஅரசு' 6.6.1937 October 31, 2022 • Viduthalai
சமூகம் மாறினால் - அரசியல் மாறும் அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். 'குடிஅரசு' 8.8.1937 October 29, 2022 • Viduthalai
அரசியல் பித்தலாட்டம் அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கூறும் கடைந்தெடுத்த முதல் தரப் பித்தலாட்டமாகும். 'குடிஅரசு' 26.05.1945 October 28, 2022 • Viduthalai
மதம் - கடவுள் ஒழிய வேண்டும் மனித பேதம் ஒழிய வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும். பொருளாதார சமத்துவம் வேண்டுமானால், கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டும். 'குடிஅரசு' 10.05.1945 October 27, 2022 • Viduthalai
குரு - சீடன் ஏன் விட்டுவிட்டார்? சீடன்: ரூபாய் நோட்டுகளில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி படங்களைப் போடவேண்டும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளாரே, குருஜி? குரு: ஏன் முப்பத்து முக்கோடி தேவர்களையும், அட்டதிக்கு பாலர்களையும் கூடப் போடலாமே, சீடா! October 27, 2022 • Viduthalai
திராவிட நாடு கொள்கை திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை அன்று. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதுபோலவே, சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அன்னியனுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கப்படக் கூடாது என்பதுபோலவே, அன்னிய மாகாணத்தானுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கக் கூடாது.… October 26, 2022 • Viduthalai
ஆரிய மலம் சாதத்தில் ஒரு பாகத்தில் ஒரு சிறிது மலம் விழுந்தாலும் முழுச் சாதத்தையும் எப்படி ஒதுக்கி விடுகிறோமோ அது போலவே, ஆரிய நுழைவு ஏற்பட்ட எல்லா விஷயங்களையும் முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என்கிற உணர்ச்சியுடன்தான் நீங்கள் காரியங்களை நடத்த வேண்டும். 'உண்மை' 1.10.1976 October 25, 2022 • Viduthalai
பக்தர்கள் பதில் கூறுவார்களா? மூடத்தனத்தின் முடைநாற்றம் பாரீர்! கிரகணத்தைக் கண்டு கடவுள் பயப்படலாமா? சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பவை பற்றி அறிவியல் தெளிவாக விளக்கம் கூறி, வகுப்பில் பாடங்களாய் சிறு பிள்ளைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்கும் நிலையில், ஓ, பக்த கோடிகளே! அந்தக் கிரகணத்திற்காக கோவிலை ஏன் மூடுகிறீர்கள்? கடவுளை ராக… October 25, 2022 • Viduthalai
இன்றைய அரசியல் தத்துவம் சமூக சம்பந்தமான குறைபாடுகளிலும், பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். 'குடிஅரசு' 6.6.1937 October 24, 2022 • Viduthalai
சமூக இயலே அரசியல் சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும். 'குடி… October 22, 2022 • Viduthalai
இன்றைய அரசியல் தத்துவம் சமூக சம்பந்தமான குறைபாடுகளிலும், பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். 'குடிஅரசு' 6.6.1937 October 21, 2022 • Viduthalai