Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர்களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.   'குடிஅரசு' 18.12.1943
October 11, 2022 • Viduthalai
ஆத்திகம் - நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல
ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால், - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சியல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவற்றைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அன்று. 'பகுத்தறிவு' 14.10.1934
October 10, 2022 • Viduthalai
பழமைப்பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்.  'குடிஅரசு' 18.12.1943
October 08, 2022 • Viduthalai
சம உரிமையே சுகவாழ்வு
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். 'பகுத்தறிவு' 9.9.1934
October 07, 2022 • Viduthalai
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும்.   'குடிஅரசு' 26.2.1944
October 06, 2022 • Viduthalai
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக - திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும்.  'விடுதலை' 6.8.1950
October 05, 2022 • Viduthalai
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும்.   'குடிஅரசு' 26.2.1944
October 04, 2022 • Viduthalai
ஜாதி - மனித இயற்கை விரோதம்
தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக்கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில் தாழ்ந்த ஜாதிக்காரர்களாய்க் கருதப்படுகிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது, மனித இயற்கைக்கு விரோதமானது. 'பகுத்தறிவு' 30.9.1934
October 03, 2022 • Viduthalai
பொதுத் தொண்டில் பலர்
கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை.    ‘குடிஅரசு’ 24.6.1944
October 01, 2022 • Viduthalai
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நட வடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.      ‘குடிஅரசு’ 3.11.1929
September 30, 2022 • Viduthalai
வகுப்புரிமை என்பது
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றிச் சமமாய் அடைய வேண்டுமென்பதுதான்.   (பெரியார் 99ஆவது விடுதலை  பிறந்த நாள் மலர், பக்.129)
September 29, 2022 • Viduthalai
யோக்கியன் செயல்
உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது.     ‘குடிஅரசு’ 3.11.1929
September 28, 2022 • Viduthalai
வகுப்புரிமையே வழி
எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், ஜாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்?  (பெரியார் 84ஆவது  விடுதலை பிறந்த நாள் மலர், பக்.129)
September 27, 2022 • Viduthalai
வாழ்க்கை வெற்றி
மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால், அவனவன் மனத்திருப்தியோடு வாழ்வது தான்.    (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.42)
September 26, 2022 • Viduthalai
நவராத்திரி
*தந்தை பெரியார் "நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம் பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் ந…
September 25, 2022 • Viduthalai
Image
கற்பு யாருக்கு வேண்டும்?
ஆண்களுக்குக் கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். பெண்களுக்குக் கற்பு இருந்தால் அது ஆண்களைக் கற்புடன் இருக்கச் செய்ய உதவாது.      ‘குடிஅரசு’ 3.11.1929
September 24, 2022 • Viduthalai
எது குற்றம்?
குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப் படுகிறானோ, - மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.     ‘குடிஅரசு’ 3.11.1929
September 23, 2022 • Viduthalai
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும்.    ‘குடிஅரசு’ 18.7.1937
September 22, 2022 • Viduthalai
படித்தவன் யோக்கியதை
பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும்.  ‘குடிஅரசு’ 14.7.1929
September 21, 2022 • Viduthalai
எனக்கேற்ற வேலை
உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன்.    ‘குடிஅரசு’ 18.7.1937
September 20, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn