
புதுடில்லி, டிச.13 நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் ஆபத்து காலத்தில் சமிக்கை புகைதரும் கருவி ஒன்றைக் கையில் கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் அந்த புகைக்கருவியை இயக்கியுள்ளனர் இதனால் நாடாளுமன்றத்தின் உள் பகுதியில் புகை எழுந்தது. வெளிப் பகுதியிலும் மஞ்சள் புகை குண்டு வீசப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment