தோழர் என்.சங்கரய்யா காலமானார்! இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்! கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

தோழர் என்.சங்கரய்யா காலமானார்! இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்! கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை, நவ. 15- சிபிஎம் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம் யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

அவருடைய உடல் பொதுமக்களின் மரியா தைக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10.00 மணியளவில், சிபிஅய்(எம்) அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சி யின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சி களை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment