தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

போபால்,  நவ.10 - பிரதமர் மோடி அனைத்தையும் தனியார் மயமாக்க விரும்புகிறார். தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில்  தேர்தல் பிரசாரம் செய்தார். கட்சிப் பேரணியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி வறுமையை ஒழிக்க காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்த திட்டம் என்ன? பா.ஜனதா தலைவர்கள் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சிப் பதிவைத்தான் நான் பார்க்கிறேன்.

மோடி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இந்தியாவில் ஒரே ஜாதிதான் என்று கூறினார். அதன் பெயர் என்ன ஏழைகளா? மறுபுறம், நான் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தற்போதைய இந்தியாவை நடத்துவதில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் பங்களிப்பு எவ்வளவு? எனது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சகோதர சகோதரிகளே, நீங்கள் அய்.ஏ.எஸ். அதிகாரியாக வந்தி ருக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்க லாம். ஆனால் 90 சதவீதம் அதிகாரிகள் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் 3 சதவீதம் பேரே இருக்கிறார்கள். நான் இதை புரிந்து கொள்கிறேன். இதை சரி செய்யும் வழியையும் அறிவேன். ஜாதிவாரி கணக் கெடுப்புதான் வேலைவாய்ப்பு இன்மைக் கான சிறந்த தீர்வாக அமையும்.

வெறுப்புணர்வை பா.ஜனதா வளர்க் கிறது. இந்து முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கிறது. ஜாதி களுக்கு இடையே பிரிவினையை தூண்டுகிறது, தனியார் மயமாக்குதல்... மத்தியப் பிரதேச விவசாயி கள் தாங்கள் விளைவித்த பயிருக்கான கூலியைகூட பெற முடியாமல் கடனில் மூழ்கி வருகிறார்கள், பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.

பிரதமர் மோடி அனைத்தையும் தனியார் மயமாக்குவதை விரும்புகிறார். அவர் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தொழில் அதிபர்களுக்கு ரூ.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார்.

-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment