மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை,நவ.14- மின் பயன்பாட் டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

மேலும் உயர்த்தப்பட்ட மின் கட் டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு, மின் பயன்பாட்டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது. 

இதனால் மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தமிழ் நாடு அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே மின் வாரியத்திற்கு ஏற்கெனவே ரூ.145 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment