வருமான வரித்துறையில் வேலை என போலி ஆவணம்... லட்சக்கணக்கில் பணம் - ஏமாற்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

வருமான வரித்துறையில் வேலை என போலி ஆவணம்... லட்சக்கணக்கில் பணம் - ஏமாற்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் கைது!

சேலம்,அக்.25 - வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தரு வதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.35 லட் சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி அருகே கோல் காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக் கண்ணன்.

இவர் சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ளிஙிசி அணியின் மாவட்ட செயலாளராக செயல் பட்டு வருகிறார்.

இவரிடம் மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு வேலை வேண்டி தொடர்பு கொண்டார். 

அப்போது கமலக் கண்ணனும், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ.35 லட்சம் பணம் பெற்றுள் ளார்.

மேலும் சந்திரமோக னிடம் அண்மையில், வருமான வரித்துறையில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையையும் வழங்கி உள்ளார்.

இந்த பணி ஆணையை எடுத்துக் கொண்டு வரு மான வரித்துறைக்குச் சென்ற சந்திரமோகன், அந்த பணி ஆணை போலி என்பதனை உணர்ந்தார். 

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்திரமோகன், இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித் தார்.

அதன்பேரில் வழக் குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையை அறிந்து, சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண் ணனை கைது செய்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

பட்டதாரி வாலிபரி டம் வருமான வரித்துறை யில் வேலை வாங்கி தரு வதாக கூறி, லட்சக்கணக் கில் மோசடியில் பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment