மீண்டும் பதட்டம் மணிப்பூரில் நிற்காமல் தொடரும் வன்முறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

மீண்டும் பதட்டம் மணிப்பூரில் நிற்காமல் தொடரும் வன்முறை

இம்பால், அக்.3 கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில், மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். குகி தீவிரவாதிகள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் உள்பட சூரச்சந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை என்.அய்.ஏ. மற்றும் சி.பி.அய் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கைதை கண்டித் தும், அவர்களை 48 மணி நேரத்துக்குள் விடக்கோரியும், குகி அமைப்புகள் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் கால வரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதைப் போல மாணவர் அமைப்புகளும்  12 மணி நேர முழு அடைப்பை நடத்தின. இதனால் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் நேற்று (2.10.2023) மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. முழு அடைப்பையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


No comments:

Post a Comment