பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வெற்றிக்கான உள் வலிமையின் பயன்பாடு சமூகப்பணித்துறை சார்பாக விழிப்புணர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வெற்றிக்கான உள் வலிமையின் பயன்பாடு சமூகப்பணித்துறை சார்பாக விழிப்புணர்வு



வல்லம். செப்.23-  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை, அ.வீரையா வாண்டையார் நினைவு சிறீ புட்பம் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை மற்றும் ஆத்மா மருத்துவமனை, திருச்சி இணைந்து  ""வெற்றிக்கான உள் வலிமையின் பயன்பாடு"" என்ற மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி  கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவி லிடியா, தேவகுமாரி வரவேற்புரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பல் கலைக்கழக இணைப் பேராசிரி யர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் தனது உரையில், நம் வாழ்க்கையில் உள்ள சவால்களை சந்திக்க உறுதியான மனநலம் வேண்டும் என கூறினார்.

பின்னர் கல்லூரியின் கலை மற்றும் வணிகவியல் முதன்மை யர் முனைவர் ரவிசந்திரன், கல்விபுல முதன்மையர் முனை வர். பாஸ்கரன் மற்றும் கணினி அறிவியல் துறை ஒருங்கிணைப் பாளர் முனைவர். மணிராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள். 

மேலும் அவர்கள் பெண்க ளின் முக்கியத்துவத்தையும், உரி மைகளையும் இக்காலத்தில் நாட்டின் வளர்ச்சியில் பெண் களின் பங்களிப்பை பற்றியும் விளக்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து திருச்சி ஆத்மா மருத்துவ மனையின் திட்ட இயக்குநர் கரண் லூயிஸ் மற்றும் உளவியல் நிபுணர் ரேவதி ஆகியோர் சிறப்புரை வழங்கினார். 

மனநலத்தை எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் இளம் பருவத்தில் வரும் பிரச்சினைகளை எவ் வாறு எதிர்கொள்ள வேண் டும் என்றும் உரையாற்றியதோடு மனரீதியான பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு மாணவர் களிடையே பதிலளித்து கலந் துரையாடினார். 

இறுதியாக இரண்டாம் ஆண்டு சமூகப்பணித் துறை மாணவி, செல்வி. சுவேதா நன்றியுரை வழங்கினார். இந் நிகழ்வில் சுமார் 280-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.


No comments:

Post a Comment