அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

சென்னை, செப்.14 ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியனை இன்று (14.9.2023) அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர் தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.  இவர் அம்பேத்கரை பற்றி அவதூறாக என்ன பேசினார் என்பது பற்றியும், இவர் மீது என்ன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரியவரவில்லை. கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment