தஞ்சை மாநகர கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

தஞ்சை மாநகர கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

 அனைத்து அரசியல் கட்சிகள் - சமுதாய இயக்கங்களை ஒன்றிணைத்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேரணி 

தஞ்சை, செப். 8 - தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் 5.9.2023 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்கவுரை யாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி கருத்துரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் கூட் டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினர்.

கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் கி.சவுந்தர்ராஜன், அண்ணா நகர் பகுதி செயலாளர் துரை.சூரியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்குறிச்சி ஏழுமலை, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், மாநகர துணை தலைவர் செ.தமிழ்செல்வன், மாநகர பகுத் தறிவாளர் கழக தலைவர் இரா.வீரக்குமார், மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன் னரசு, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் அ.கலைச் செல்வி, தஞ்சை மாநகர செய லாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, பெரியார் சமூக காப்பணி இயக்குனர் தே.பொய்யாமொழி, மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநில மாணவர் கழக செய லாளர் இரா.செந்தூரபாண்டி யன், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனி வேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில கிராம பிரச்சார அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்க செயல் பாடு குறித்த கருத்துகளை கூறி உரையாற்றினர்.

மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் கூட்டத்தின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பு கூறினார். இறுதியாக மாநகர துணை செயலாளர் இரா.இள வரசன் நன்றியுரையாற்றினார்.

குடந்தை மாநகர தலைவர் கவுதமன், சூரியம்பட்டி நா.ரெங்கராசன் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 17 திராவிடர்களின் தேசிய திருவிழாவாக கொண் டாடும் வகையில் தஞ்சை மாந கரில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கு வது, தஞ்சை மாநகரில் அமைந் துள்ள கழக லட்சியக் கொடிக ளையும் கழக தோழர்களின் இல்லங்களில் அமைந்துள்ள இலட்சியக் கொடிகளையும் மோட்டார் சைக்கிள் பேரணி யாக சென்று ஏற்றுவது, பெரியார் பட ஊர்வலங்களை நடத்துவது, ஒலிப்பெருக்கி வைத்து இயக்கப் பாடல்களை இசைக்க செய்வது, சுற்றுச் சூழலை பாதுகாக்க மரக் கன்றுகளை நடுவது, தெருமுனை கூட்டங்கள் பொதுக் கூட் டங்களை நடத்துவது என தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை மிக எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், திராவிடர் கழகமாம் தாய்க் கழ கத்தின் சார்பில் 2023 அக் டோபர் 6 அன்று தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நடைபெறும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச் சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டா லின் அவர்களின் பாராட்டு விழாவிற்கு தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் தஞ்சை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சுவ ரெழுத்து விளம்பரம் செய்வது விழா ஏற்பாட்டு களப்பணியில் முழுமையாக ஈடுபடுவது எனவும், தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டிற்கான தகை சால் தமிழர் விருது பெற்றுள்ள திராவிடர் கழக தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு முதல மைச்சர் சமூக நீதிக்கான சரித் திர நாயகர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையம் தொடங்கி பழைய பேருந்து நிலையம், தந்தை பெரியார் சிலை வரை அனைத்து அர சியல் கட்சி பிரமுகர்களையும் அனைத்து சமுதாய இயக்கங் களையும் ஒன்றிணைத்து தந்தை பெரியார் படத்துடன் பெரியார் பிறந்த நாள் விழா பேரணியை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. 

No comments:

Post a Comment