மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி நாடகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி நாடகம்

போபால், ஜூலை 7- பழங்குடி இளை ஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளை ஞரின் கால்களை கழுவினார் ம.பி. முதலமைச்சர்ர் சிவராஜ் சிங் சவு கான்.

மத்திய பிரதேச சமூக வலை தளங்களில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காட்சிப் பதிவு வைரலாக பரவியது. அதில், சிகரெட் பிடிக் கும் ஒரு நபர், பழங்குடி இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. 

இது தொடர்பாக சித்தி மாவட்டம், பஹ்ரி அருகேயுள்ள குப்ரி கிராமத்தை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப் பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த சூழலில் சிறுநீர் கழிக் கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பழங்குடி இளைஞர் தலை நகர் போபாலில் உள்ள முதல மைச்சர் சிவராஜ் சிங்கின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அந்த இளைஞருக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் வரவேற் றார். விநாயகரின் சிலையை பரி சாக வழங்கினார்.

பழங்குடி இளைஞரின் கால் களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தண்ணீரை ஊற்றி கழு வினார். பின்னர் அவரோடு இணைந்து சாப்பிட்டார். அப் போது பழங்குடி இளைஞரிடம் முதலமைச்சர் கூறியதாவது:

நடந்த சம்பவத்துக்காக வருத் தம் தெரிவித்துக் கொள்கிறேன். பழங்குடி மக்களை நான் "கடவு ளாக" மதிக்கிறேன். தவறிழைத்தவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு தரைமட்டமாக்கப் பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் எனது தம்பி போன்றவர். அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும். அவர் தொழில் தொடங்கஅரசு சார்பில் உதவி வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவு கான் தெரிவித்தார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் நடந்தவை பாஜகவின் தேர்தல் நாடகம் என்பது உறுதி யானது. 

 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞரை மிரட்டி பத்திரத்தில் எனக்கும் இந்த நிகழ்விற்கும் தொடர்பில்லை என்று எழுதி வாங்கினார்கள். மேலும் முதல் நாள் காவல்துறை குற்றவாளியி டம் கவலைப்படாதே பிணை எளி தில் கிடைத்து விடும் என்று கூறிய காணொளி சமூகவலைதளத்தில் உள்ளது. அதே போல் அவரது வீடு முழுமையாக இடிக்கப்படவில்லை. வீட்டிற்கு வெளிப்பகுதியில் மாட்டுத்தொழுவத்தோடு சேர்ந்த சிறிய அறை மட்டுமே இடிக்கப் பட்டது,  இஸ்லாமியர்கள் என் றால் ஒட்டுமொத்த வீட்டையும் தரைமட்டமாக்கி விடுவார்கள், ஆனால் பார்ப்பனரான அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மாட்டுத்தொழுவத்தை மட்டுமே இடித்துள்ளனர். 

அந்த மாட்டுத்தொழுவத்தை அவர்களே இடித்து பெரியதாக கட்ட திட்ட மிட்ட நிலையில் அரசே அவர்களுக்கு உதவி செய் துள்ளதாக அங்குள்ள ஊடகவி யலாளர் கூறினார்.


No comments:

Post a Comment