முதலமைச்சர் மாநில இளைஞர் விருது இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூலை18- சமுதாய வளர்ச்சிக்கு சேவை யாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகை யில் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருதுடன், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ஆக. 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்று பவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment