மருத்துவர்களுக்கான 'நாள்' உருவான கதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

மருத்துவர்களுக்கான 'நாள்' உருவான கதை

உலகின் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாளை மருத்துவ நாளாக கடைப்பிடிக்கின்றன. அந்தந்த நாடுகளில் மருத்தவத்துக்காக தியாகம் செய்தவர்கள், அளப்பரிய சேவையாற்றியவர்களின் நினைவாக, மருத்துவ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, நம் நாட்டில், ஜூலை, 1இல், மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பீகார் மாநிலம், பாட்னா அருகேயுள்ள, பாங்கிபோர் என்ற ஊரில், 1882, ஜூலை 1இல் பிறந்தவர் பி.சி.ராய் என்கிற பிதான் சந்திரா ராய்; டாக்டர். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். மருத்துவப்பணிக்காக தன்னை அர்ப் பணித்துக் கொண்டவர். நாட்டு விடுதலைக்காக, காந் தியாருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்றவர். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச் சராகவும் இருந்தவர். அப்போதும் கூட, ஏழைகளுக் காக இலவச மருத்துவம் செய்தவர். தன் வீட்டையே ஏழைகளுக்காக மருத்துவமனை கட்ட வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.

இவர், 1962, ஜூலை 1, (அவரது பிறந்த தினம்) அன்று மறைந்தார். அவரது நினைவாகத்தான், இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை, 1இல் மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த, 1976இல், அவரது நினைவாக மருத்துவம், அறிவியல், பொது விவகாரம், கலை, இலக்கிய துறைகளில் சிறப்புற பணிபுரிபவர்களுக்கு 'பி.சி.ராய் விருது' அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment