பொது நூலகத்துறைக்கு 7,740 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

பொது நூலகத்துறைக்கு 7,740 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை, ஜூலை 16
காமராஜர் பிறந்த நாளில், கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7,740 புத்த கங்களை பொது நூலகத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.7.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 121-ஆவது பிறந்தநாளில், நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங் கேற்று, அவரது புகழை போற்றினேன்.

அறிவியக்கமாம் திமுக செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடை களையும் தவிர்த்து, புத்தகங்களை அளித் திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன் றரை லட்சம் புத்தகங்களை தமிழ்நாட் டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்த கங்கள் வேண்டி கடிதம் எழுதியவர் களுக்கும் அளித்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, காமராஜர் பிறந்த நாளில், கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7,740 புத்தகங்களை பொது நூலகத்துறைக்கு வழங்கினேன். காமராஜர் பிறந்தநாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச் சாலை’ என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment