வாட்ஸ்அப் பகிர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

வாட்ஸ்அப் பகிர்வு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல் பட்ட தேவர் சமூகத்தை சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகினார்.

அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் மிக மிக முக்கியமானது.

"இந்து என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன்.

எட்டு ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணி செய் தேன்.

இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பாஜகவின் கொள்கையை பின்பற்றி வந்தேன்."

"ஆனால் எனது வீட்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்று இலட்சியத்தோடு இருந்த என் பெண் பிள்ளையின் கனவை எனது கொள்கை பொசுக்கி விட்டது."

"இட ஒதுக்கீட்டின் அவசியத்தை இப்போது உணர்ந்தேன்.

எனது தலைமுறையில் முதல் பட்டதாரி அவள்தான்.

அவளின் ஆசையில் மண்ணை அள்ளி போட்ட வர்களில் நானும் ஒருவன்." என்று கூறிக் கண்ணீர் விட்டார்.

அவர் மேலும்,

"பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்பு களை வளர்க்க எங்கள் உயிரை கொடுத்து வேலை செய்கிறோம்.

ஆனால் நம் மக்களின் நலன் சார்ந்த எந்த செயல் திட்டமும் அங்கே இல்லை.

அவர்கள் முழுக்க பார்ப்பனர்களுக்காகவே அந்தக் கட்சிகளை நடத்தி வருகிறார்கள்.

என் வீட்டில் பாதிப்பு வரும் போது தான் நான் அதை உணருகிறேன்.

இனிமேல் அங்கே இருந்தால் என்னை விட முட்டாள் வேறுயாரும் இல்லை." என்றார்.

அவரது மனமாற்றத்தை வரவேற்கிறோம்!.

தனிநபர் மாற்றமே சமூக மாற்றம்!.

பார்ப்பனரல்லாதோர் அனைவரும் பாஜக விலிருந்து விலகுங்கள்!

- சோம. இளங்கோவன், அமெரிக்கா


No comments:

Post a Comment