உலக மகளிர் நாள் - அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

உலக மகளிர் நாள் - அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா!

தூத்துக்குடி, ஏப். 5- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் 25.3.2023 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ‘அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவும்’, ‘உலக மகளிர் நாள் விழாவும்’ தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்குத் திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் மா.தெய்வப்பிரியா தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செ.வள்ளி அனைவரையும் வரவேற்றார். ‘உலக மகளிர் நாள்’ பற்றித் திராவிடர் கழக மாவட்டத் துணைச் செயலாளர் இரா.ஆழ்வார், தி.மு.க. இலக்கிய அணி மோ.அன்பழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சிறப்புரையாக ‘அன்னை மணியம்மையாரின் சிறப்புகள்’, அவர் நடத்திக் காட்டிய இராவண லீலா கொண்டாட்டம், நெருக்கடி காலத்தை வீரத்துடன் எதிர்கொண்டு இயக்கத்தைக் காத்த விதம், அய்யாவை அருகிருந்து ஒரு தாயாய்க் கவனித்துப் பாதுகாத்த பாங்கு, அய்யாவைத் தொடர்ந்து தனக்குரிய உடைமைகளைக் கழகத்திற்கே வழங்கிய கொடைமைத் தன்மை பற்றியும் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் எடுத் துரைத்தார். 

இறுதியாகக் கழகத் தகவல் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் இ.ஞா.திரவியம் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 7:30 மணிக்கு நிறைவுற்றது. கவிஞர் கோ.இள முருகு, கரு.மாரியப்பன், அமைப்பாளர், வழக்குரைஞர் இலிங்கராஜ், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் செ.அழகு உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment