அட அண்டப் புளுகே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

அட அண்டப் புளுகே!

‘முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல், வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியதா?' என்று பாளையங்கோட்டையிலிருந்து பி.சிவா என்ற வாசகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வைக்கம் சத்யாகிரஹம் ஈ.வெ.ரா. நடத்திய போராட்டத்தைப் போலவும், திராவிட இயக்கப் போராட்டம் போலவும் சித்தரிக்கப்பட்டு தி.க., தி.மு.க. இரண்டும் அதற்குச் சொந்தம் கொண்டாடுகின்றன. முதலில் ஈழவர் சமுதாயத்தால் துவக்கப்பட்டு, பிறகு காங்கிரஸ் நடத்திய வைக்கம் போராட்டத்தில், அன்று காங்கிரஸ் தொண்டராக இருந்த ஈ.வெ.ரா. பங்கேற்றார். அவ்வளவுதான் அவருக்கும், அதற்கும் தொடர்பு.

அதன்பிறகு, அறவே மாறினார். அவர் காங்கிரஸையும், நாடு சுதந்திரம் பெறுவதையும் எதிர்த்தார். வைக்கம் போராட்டக் காலத்தில் ‘திராவிடம்' என்ற பெயரே அரசியலில் இல்லை. அந்த நிலையில், ஈழவர்களை ஆதரித்து காங்கிரஸ் நடத்திய அந்தப் போராட்டத்தை, ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்து கடத்தி திராவிடச் சொத்தாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின். இப்படி தி.மு.க. வைக்கம் சரித்திரத்தையே கடத்த முயல ஒரே காரணம், அதுபற்றிய விவரங்கள் தமிழ் மக்களுக்குத் தெரியாததுதான் என்று எழுதுகிறார் பூணூல் திருமேனி குருமூர்த்தி.

-‘துக்ளக்', 26.4.2023, பக்கம் 31

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார்தான் அதில் கலந்துகொண்டார் என்ற பாலபாடம்கூடத் தெரியாத கூமுட்டைகள் என்ன தான் எழுதாது?

கடலைத் தாண்டக் கூடாது என்று அய்தீகம் பேசும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கிறுக்குவதில்லையா? அதேபோல் தான் இதுவும்!

No comments:

Post a Comment