ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் திரா விடர் கழகம் சார்பாக தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு விளக்க பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றி யம், முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட் டணம் கடற்கரை கிராமத்தில் வைத்து நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கழக தோழர் கள் மாஸ்டர் டெனிபோஸ், ஆரோக்கிய ரமேஷ், பெய்சில் மற்றும் தோழர்கள் பங் கேற்று பொதுமக்களுக்கு மாநாடு குறித்த துண்டறிக்கைகளை வழங்கி பரப்புரை செய் தனர். மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்களுக்கு வழங்கினர். தமிழ்நாட்டு மீனவர்நலனுக்காகப் பாடுபடுகின்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு குமரிமாவட்ட மீனவர்கள் நன்றி தெரி வித்தனர்.
No comments:
Post a Comment