புதுடில்லி ஏப்.7 இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவரு கின்றனர். 2,826 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி கரோனா தொற்று எண்ணிக்கையானது 5,000-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் டில்லி, மகாராட்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதி கரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக் கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின் பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment