சென்னை பெருநகர 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

சென்னை பெருநகர 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகள்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை

சென்னை, ஏப்.30- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-_2024 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதி யிலுள்ள 26 சட்டமன்ற தொதி களின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகை யில் முதற்கட்டமாக 25.4.2023 அன்று வடசென்னை பகுதிகளான கொண்டித்தோப்பில் ரூ.10 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிக ளுக்கான மறுவாழ்வு மய்யம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மய்யம் அமைத்தல், தண்டயார்பேட்டை யில் ரூ.25 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் மற்றும் பணி மனை அமைத்தல், காசிமேடு கடற்கரையை ரூ.6 கோடி மதிப் பீட்டில் மேம்படுத்துதல், மற்றும் மூலகொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சமுதாயக் கூடம் அமைத் தல் போன்ற திட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, இத்திட்டங்களை செயல்படுத்த திட்டங்களின் வடிவமைப்பு, திட்டக்கூறுகள், திட்டங்களில் அளிக்கப்படும் பொது வசதிகள், அவற்றின் பராம ரிப்பு தேவைகள், பயனாளிக ளுக்கான வசதிகள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கட்டட வடிவமைப்பாளர்களு டன் கலந்தாலோசிக்கப்பட்டு, திட்டப்பணிகளை விரைந்து கொள்ளுமாறு அமைச்சர் பி.கே. சேகர்பாபு வலியுறுத்தினார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி. மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment