காணாமல் போன ஆபத்து மிக்க கதிரியக்கத் தனிமம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

காணாமல் போன ஆபத்து மிக்க கதிரியக்கத் தனிமம்

ஆஸ்திரேலியாவில் மிக ஆபத்தான கதிரியக்கம் கொண்ட தனிம பெட்டகம் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தைவிடச் சிறிய அளவிலான அந்த பெட்டகத்தில் கதிரியக்கத் தன்மை கொண்ட Caesium-137  திரவம் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் காணாமற்போன அதனைத் தேடும் முயற்சிகளை மாநில அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

பீட்டா, காமா (beta, gamma)  கதிர்களை வெளியேற்றும் அந்தத் தனிமத்தைப் பெர்த்துக்கு விநியோகம் செய்யும் வழியில் அது வாகனத்திலிருந்து வெளியே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அது கிரேட் நார்தன் ஹைவே(Great Northen Highway)  நெடுஞ்சாலையில் காணாமற் போனதாக நம்பப்படுகிறது. அந்தCaesium-137  விழுந்திருப்பதாக நம்பப்படும் பகுதிக்கு அருகில் வசிக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த தனிமத்தைத் தொட்டாலே தோல் எரிந்துவிடும், நோய் ஏற்படும், புற்றுநோய் உண்டாகும் ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.


No comments:

Post a Comment