ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 17.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராகுல்காந்தியை பேசவிடாமல் பா.ஜ. மற்றும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்கும்படி மக்களவைத் தலைவரைச் சந்தித்து ராகுல்காந்தி கோரிக்கை வைத்தார்.

* சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளு நர் தன்னிச் சையாக செயல்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது போல், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது குறித்தும் தீர்ப்பளிக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*"கடந்த 3 நாட்களில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக அமைச்சர்களை மட்டுமே மைக்கில் பேச அனுமதித்ததையும், பின்னர் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரை யும் பேச அனுமதிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத் ததையும் குறிப்பிட்டு, ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளா னது என திருணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா டிவிட்டரில் பதிவு.

தி இந்து:

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான அமைப்பு (செல்), அமைத்திட அய்.அய்.டி. டில்லி நிர்வாகம் உத்தரவு. அனைத்து நிலைகளிலும் சேர்க்கைக்கான நிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகளை செயல்படுத்த, கண்காணிக்க மற்றும் மதிப்பீடு செய்ய, செல்லுக்கு அறிவிப்பு அதிகாரங் களை வழங்குகிறது; அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் இது செயல் படுத்தும் எனவும் அறிவிப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment