துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

துறையூர், மார்ச் 7, துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு துறையூர் ஓட்டல் ஜானில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் 

ச. மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் 

ச. மகாமுனி அனைவரையும் வரவேற்று பேசினார். திருச்சி மண்டல கழக தலைவர் ப.ஆல்பர்ட். சிறப்புரை யாற்றினார்.

மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார். மாவட்ட துணைத்தலைவர் முசிறி ரத்தினம். 

ப. க. மாவட்ட தலைவர் அ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்ற பட்டன. 

தீர்மானங்கள்:

1.துறையூர் புதிய கழக மாவட்டமாக 

அறிவித்த தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

2.வரும் மே 2023இல் துறையூரில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவது. 

3. புதிய கிளைக் கழகங்கள் உருவாக்குவது. 

4. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. 

5. துறையூரில் தந்தை பெரியார் சிலை அமைக்க முயற்சி செய்வது

6. மார்ச் 10இல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடுவது. 

7.தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 

8. புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து பயனாடை அணிவிக்கப்பட்டது. 

கலந்து கொண்டோர்கள்

மாவட்ட அமைப்பாளர் த. ரஞ்சித் குமார். மாணவர் கழக மாவட்ட தலைவர் ரெ.தன்ராஜ் செயலாளர் விஷ்ணு வர்தன்.மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் செ. செந்தில் குமார். துணை செயலாளர் சரண் ராஜ், மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் காவியா என்ற பிரசன்னா. மாவட்ட ப. க. செயலாளர் பிரபு. மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். மாவட்ட ப. க. துணை செயலாளர் கருணாகரன். மாவட்ட காப்பாளர் அ. முருகேசன்.

துறையூர் ஒன்றிய கழக தலைவர் இர.வரதராஜன், உப்பிலியபுரம் ஒன்றிய அமைப்பாளர் நாத்திகம் பாலசந்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி இரமேஷ், துறையூர் நகர மாணவர் கழக தலைவர் சர்ஜுன், நகர மாணவர் கழக செயலாளர் அர்ஜுன், நகர ப. க. அமைப்பாளர் 

அ.தமிழ்செல்வன், துறையூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் கண்ணனூர் ப. குணால், இளைஞரணி பா. அரிபிரசாத், நகர ப. க. துணை அமைப்பாளர் கபில் தேவ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறி சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment