பிரேசில் பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் அமைத்த இடதுசாரி தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

பிரேசில் பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் அமைத்த இடதுசாரி தலைவர்

வை.கலையரசன்

பிரேசிலின் பூர்வகுடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து மீளவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வா, நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக பூர்வ குடிகளுக் கான அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ளார். மேலும், பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் செயற்பாட்டாளர் சோனியா குவாஜாஜாரா பூர்வ குடிகளுக்கான அமைச்சராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வுகளை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுவதுடன், புவியின் வெப்பத்தைச் சம நிலைப் படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பது அமேசான் காடுகள்.  இக்காடுகளின் பெரும்பகுதியை உள்ளடக்கிய நாடு பிரேசில்.  இதனால் இது உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளாக என் அரை நூற் றாண்டுகளாக இந்தக் காட்டை அழிப்பதிலும் அங்கு வாழும் பூர்வக்குடி மக்களை அங்கிருந்து துன்புறுத்தி விரட்டுவதிலும் பெரும் முதலாளித்துவமும் ஆண்ட ஏகாதிபத்திய அடிமை அரசும் ஈடுபட்டு வந்தன.

அங்கு வாழ்ந்த பூர்வகுடி மக்களை உயிரியல் பூங்காவில் இருக்கும் உயிரினங்களுக்குச் சமமாக வைத்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே பேசும் ஒரு அவல நிலையும் கடந்த காலங்களில் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரித் தலைவரான லூலா டா சில்வா தான் தேர்தலில் வெற்றிபெற்றால் அமேசானின் சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்தல், சட்டத்திற்குப் புறம்பான சுரங்கங்கள், பிற வணிக நிறுவனங்கள் மற்றும் குற்றங்கள் மீதான கடுமையான நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சட்டங் களை வலுப்படுத்துதல் மற்றும் பிரேசிலின் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான தனி அமைச்சகம் அமைத் தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான லூலா சிறுவயதில் "ஷூ பாலிஷ்" போடுபவராகவும், தெருவோர வியாபாரியாகவும் இருந்து பின்னர் தொழிற் சாலைப் பணியாளரானார். 1970களில் தொடர்ச்சியாக பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங் கேற்ற அவர், குறிப்பிடத்தக்க தொழிற்சங்கத் தலை வராக உயர்ந்தார். பின்னர் 1980ஆம் ஆண்டு பிற தொழிற்சங்கத் தலைவர்களுடன் இணைந்து இடதுசாரி சிந்தனையுள்ள தொழிலாளர் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். 1982ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் தோல்வியுற்ற அவர், அரசியலில் இருந்து விலக நினைத்தபோது. கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் அறிவுறுத்தலை ஏற்று அம்முடிவைக் கைவிட்டார். 1986 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1989,1994 மற்றும் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். எனினும் மனம் தளராமல் மீண்டும் 2002ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதோடு 2002 முதல் 2010ஆம் வரை அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். அந்தக் காலகட்டத்தில் லூலாவின் சிறப்பான சமூக நலத்திட்டங்கள், ஊழல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய நடவடிக்கைகளால், பிரேசிலில் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறியது. பிரேசில் நாட்டின் சட்டங்களின்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஒருவர் அதிபராக இருக்க முடியாத காரணத்தால், அவர் கட்சியைச் சார்ந்த டில்மா ரூசெப்பை அதிபராக்கினார். 2018ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லூலாவை, பின்னர் 2019ஆம் ஆண்டு பிரேசிலின் உச்சநீதிமன்றம் அவரின் மீதான குற்றச்சாட்டு போலியானது என்பதை உறுதிசெய்து விடுதலை செய்தது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபரான லூலா தற்போது அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த அமைச்சகத்தின் அமைச்சராக பூர்வகுடி மக்க ளின் உரிமைகளுக்காகப் போராடிய சோனியா குவாஜா ஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் பூர்வகுடி இனங்களுள் ஒன்றான குவாஜாஜாரா இனத் தைச் சேர்ந்த சோனியா குவாஜாஜாரா, ‘பிரேசில் பூர்வகுடி மக்களின் குரல்’ (ஙிக்ஷீணீக்ஷ்வீறீ: மிஸீபீவீரீமீஸீஷீus றிமீஷீஜீறீமீ கிக்ஷீtவீநீuறீணீtவீஷீஸீ - கிறிமிஙி)  என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பொல்சனாரோ அரசின் சூழலிலியல் குற்றங்களுக்கு எதிராக மக் களை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அதனை மற்ற உலக நாடுகளின் பார்வைக்கும் எடுத்துச்சென்று பூர்வகுடிகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.

அமைச்சராகப் பதவியேற்றது குறித்து அவர் கூறுகையில், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அளிப்பதாகவும், இது தனக்கு மட்டுமல்லாது, பூர்வகுடிகளின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவும், பிரேசிலை மறுசீரமைப்பதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment