பொதுத்துறையை சேர்ந்த இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (அய்.அய்.எப்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எம்.பி.ஏ., / பி.எல்., / பி.இ., / பி.டெக்., படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.
வயது : 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
ஆயுதத் தொழிற்சாலையில்
5395 பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் 'யான்ட்ரா இந்தியா' ஆயுத தொழிற் சாலை நிறுவனத் தில், 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், எலக்ட்ரீசியன், பெயின்டர் உள்ளிட்ட அய்.டி.அய்., பிரிவில் 3508, மற்ற பிரிவுக்கு 1887 என மொத்தம் 5395 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 432 இடங்கள் (அருவங்காடு 47, திருச்சி 11, சென்னை 374) உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அய்.டி.அய்., பிரிவுக்கு தொடர்புடைய பிரிவு முடித்திருக்க வேண்டும்.
அழைக்கிறது தேசிய தகவல் மையம்
தேசிய தகவல் மய்யத்தில் (என்.அய்.சி.,) பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன.
காலியிடம் : சயின்டிஸ்ட் 'பி' 71, சயின்டிபிக் ஆபிசர் / பொறியாளர் 196, சயின்டிபிக் / டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 331 என மொத்தம் 598 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 4.4.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.