தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற் கான முக்கிய நிறுவனமாகவும் விளையாட்டு தொடர்பான அரசின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஒருமுகப் படுத்தி விளையாட்டில் அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைக்க ஏதுவாக தமிழ்நாடு அரசால் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆணையத்தின் தலைவர் ஆவார்.  தமிழ்நாட்டில் விளையாட்டிற்கான தலைமை அமைப்பாக விளங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ் நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் குறித்த கொள்கை முடிவுகளை தமிழ் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது ஆணையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கங்கள்:-

மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவித்து மேம்படுத்துதல், விளையாட்டின் நிலையை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துதல், விளையாட்டு மற்றும் போட்டி விளையாட்டுகளில் தரத்தை உயர்த்துதல். விளையாட்டுக்கள் மற்றும் போட்டிகளை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றிகரமாக பங்கேற்க செய்ய ஏதுவாக திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்ட றிந்து ஒருமுகப்படுத்தி பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி அளித்தல்.

தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மென்மேலும் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிய பல்வேறு ஊக்கத் தொகைகள் மற்றும் விருதுகளை அளித்து ஊக்குவித்தல், மாநிலத் தில் பல்வேறு நிலைகளில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்துதல்., விளையாட்டு மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சிகளை துவக்கி மேற்கொள்ளுதல், ஆதரவளித்தல், உற்சாகமளித்தல் மற்றும் விளையாட்டு தொடர்பான மருத்துவம், உளவியல், இயன்முறை மருத்துவம் மற்றும் அதை சார்ந்த இதர அறிவியல் துறைகளில் மேம்படுத்துதல். மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு தேவைகளை அங்கீகரித்தல் மற்றும் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வசதி ஏற்படுத்தித் தருதல். பல்வேறு விளையாட்டுகளுக்கும் மேம்பட்ட பயிற்சி அளிக்க ஆதரவளித்தல். மக்களிடையே உடற்தகுதி விளையாட்டில் ஆர்வம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு குறித்து உள்ளுணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான மற்றும் வலிமையான மாநிலத்தை உருவாக்குதல்

விளையாட்டு மைதான வசதிகள்:-

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 400 மீ தடகள ஓடுதலம், கேலரி, கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், ஸ்குவாஷ் (உள்விளை யாட்டு அரங்கம்), குத்துச்சண்டை வளையம், இறகுப்பந்து (உள்விளையாட்டு அரங்கம்), பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் மைதானம் வாலிபால் மைதானம், கூடைப்பந்து மைதா னம், நீச்சல் குளம், குழந்தைகள் நீச்சல் குளம், கைப்பந்து மைதானம் போன்ற வசதிகள் உள்ளது


No comments:

Post a Comment