பட்டுக்கோட்டை அ.ஆரோக்கியராஜ் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

பட்டுக்கோட்டை அ.ஆரோக்கியராஜ் படத்திறப்பு

பட்டுக்கோட்டை, பிப். 11- பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மறைந்த அ.ஆரோக்கியராஜ் அவர்களின் படத்திறப்பு 05.02.2023 அன்று மதியம் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையிலும் ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி , நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் முன்னிலையிலும் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று மறைந்த அ.ஆரோக்கியராஜ் அவர்கள் திராவிடர் கழகத்திற்கு ஆற்றிய தொண்டினையும், அவரது சிறப்பு இயல்புகளையும் எடுத்துக் கூறி நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

மறைந்த அ.ஆரோக்கியராஜின் படத்தை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.இரத்தினசபாபதி,  மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி காமராஜ் , மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து. துரைராஜ், மாவட்ட ப.க துணை செயலாளர் சிவஞானம், ஒன்றிய செயலாளர் ஏனாதி இரங்கசாமி, மதுக்கூர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி வீரக்குறிச்சி ஜேசு மற்றும் வீரகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment