சாமியாரிணியின் 'உபதேசம்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

சாமியாரிணியின் 'உபதேசம்'

ஹிந்து கலாச்சாரத்தை மறந்து லிப்ஸ்டிக், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் சகிதம் சுற்றுவதால் தான் 'லவ்ஜிகாத்'தில் சிக்கிக்கொண்டு சீரழிகின்றார்கள் என சாமியாரிணி பிராச்சி கூறியுள்ளார். ஆகவே பெண் களுக்கு கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும் பரப் புரையை விரைவில் தொடங்க உள்ளதாகவும் உளறியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் பேசுகையில்  முஸ்லிம் இளை ஞர்களை நெருங்க விடாமல் ஹிந்து பெண்கள் தடுக்க வேண்டும்.

'லவ்ஜிகாத்'தில் பெண்கள் சிக்கிக்கொள்வதற்கு முக்கிய காரணம் அவர்கள் போடும் லிப்ஸ்டிக், பவுடர், மேக் அப், ஜீன்ஸ், டீசர்ட், பேண்ட்,   போன்றவைதான். பெண்களின் பைகளில் லிப்ஸ்டிக்கும், பவுடரும் உள்ளன. இதை எல்லாம் போட்டுக்கொண்டு போனால் 'லவ்ஜிகாத்'தில் உங்களை எளிதில் சிக்க வைத்து விடுவார்கள்  முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்காகவே இருக்கிறார்கள்; அதே போல் ஹிந்துப் பெண்கள் அனைவரும் மதத்தை மரபு வழியில் முழுமையாகப் பின்பற்றி ஆச்சாரமாக இருக்க வேண்டும். தலைநகர் டில்லியில் ஜம்மியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானியின் ஓம் அல்லா என்ற கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த அவர், "மதானிக்கு ஹிந்து மதத்தின் ஏ, பி, சி, டி பற்றி தெரியாது. அல்லா என்பது என்ன என்று எங்களுக்குத் தெரியும்.  இங்கே வந்து ராம், அல்லா, ஓம் எல்லாம் ஒன்று என்று கூறவேண்டாம்" என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர் பெற்ற சாத்வி பிராச்சி, இதற்கு முன் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து உள்ளதுடன், கொலை மிரட்டல்களையும், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களையும் பேசி இருக்கிறார்.  இவர் 2016 ஆம் ஆண்டு ரத்தன்பூர் என்ற பகுதியில் பேசும் போது இஸ்லாமியப் பெண்களை ஹிந்து இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் அவர்கள் வயிற்றில் ஹிந்து குழந்தைகள் ஜனிக்கட்டும். அது தான் நமது தர்மத்திற்குச் செய்யும் நல்ல காரியம் என்றார். அதன் பிறகு இது தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது வரலாற்றில் அவுரங்கசீப் இப்படிக் கூறினார் என்பதைத்தான் எடுத்துக்காட்டினேன், ஆனால் ஊடகங்கள் தவறாக எழுதிவிட்டன, என்று விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஒன்று சொல்வது அது பிரச்சினை ஆனவுடன், மாற்றிச் சொல்லுவது அவர்களின் குருதியிலேயே உறைந்த ஒன்று.

யார் எந்த உடையை உடுத்த வேண்டும் என்று சங்கிகள் பேசுவது தான் வேடிக்கை!

ஹிந்து மதத்தில் கணவனை இழந்த பெண்ணை மூளி என்றும் மொட்டை அடித்து, வெள்ளைப் புடவை உடுத்தி, மூலையில் போய் உட்கார வேண்டும் என்றும், அக்ரகாரத்தில் போய்க் கூவிக் கூவி பேசட்டுமே பார்க்கலாம். மரபு வழியைப் பற்றி அவர்களிடம் உபதேசிக்க வேண்டியதுதானே!

பெண்கள் எல்லாம் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று மனுதர்மம் சொல்லுகிறதே- அதனை ஒப்புக் கொண்டுதான் இந்த சாமியாரிணிகள் ஹிந்து மதத்தில் இருக்கிறார்களா?

கங்கைக் கரைகளிலும் வடநாட்டின் பல பகுதி களிலும் நிர்வாண சாமியார்கள் அலைகிறார்களே! கும்பமேளாவில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசம் கொஞ்சமா நஞ்சமா?

நாகரிகம் என்பது உடையில் மட்டுமல்ல - பேச்சிலும்கூட இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment