சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி

சிதம்பரம் பிப் 24 சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் 22.2.2023 அன்று மாலை சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் கலந்து கொண்டு நாட்டியக் கலைஞர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந் தினர் மாளிகையில் தங்கினார். 

 ஆளுநர் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் நேற்று (23.2.2023) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற ஆளுநர் நடராஜ, சிவகாமி அம்மன் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தார்.  பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருதினர் மாளிகைக்கு சென்றார். இதனிடையே, முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் மார்க்ஸியம் குறித்து அவதூறாக பேசும் ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சிதம்பரம் கீழ வீதி, தெற்கு வீதி, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமையில் ரமேஷ் பாபு, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தெற்கு வீதியில் கருப்பு கொடியுடன் திரண்டனர்.பின்னர் அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை   கைது செய்தனர்.  


No comments:

Post a Comment