டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்

அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின்

சென்னை,பிப்.23- டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தினுள் அத்துமீறி புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், ஹிந்துத்துவா வன்முறையா ளர்கள் தந்தைபெரியார், காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தத்துவத் தலைவர்களின் படங்களை சேதப்படுத்தி, மாண வர்கள்மீது கொடுமையான தாக் குதலை நடத்தினர். அத்தாக்கு தலைக் கண்டித்தும் விரைவில் அங்கு தந்தை பெரியார் பற்றிய கருத்துரையை தொடங்க உள்ள தாகவும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளை ஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப் பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு,

டில்லி, ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் (யிழிஹி) பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (கிஙிக்ஷிறி) அமைப்பானது,  20.2.2023 அன்று தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தி யிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ் நாடே கொந்தளித்து நிற்கிறது. இதனைக் கேள்விப்பட்ட தி.மு.க. தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண் டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

டில்லி காவல்துறை, இந்தக் கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப் பதைக் கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை யாகப் பொதுவுடைமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பா.ஜ.க.-வின் ஏ.பி.வி.பி. அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்கு தலை நடத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெ.என். யூ-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, குண் டர்களை வைத்து ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்திய கொடுந்தாக் குதலை கண்டித்தும், காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர்களை தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை யேற்று, கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியின் சார் பில் நாங்கள் கழக நிர்வாகிகளுடன் டில்லி, ஜெ.என்.யூ-விற்கு சென்று, காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் சங்க தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மேலும், ஜெ.என்.யூ மாணவர் களை, மாணவர் போர்வையில் வந்து தாக்கிய குண்டர்களையும், அவர்களை ஏவிவிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பினரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்களது கண்டனக் குரலை எழுப்பினோம்! அச்சம்பவத்தினால், ஜனநாயக மாண்பினை மதிக்கும் இந்திய அளவிலான அனைத்து மாணவர் அமைப்புகளும் வெகுண்டெழுந்து ஏ.பி.வி.பி.-விக்கு பெரும் கண்ட னங்களை தெரிவித்ததை நாடறியும்.

தன்னுடைய கொடூர சர்வாதி காரத்தில் கோலோச்சுகிற பா.ஜ.க. ஆட்சியின் தலைமையிடமாக விளங்கும் டில்லி தலைமையிடத் திற்கே, தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் நிர்வாகி களுடன் சென்று காயமுற்ற மாண வர்களுக்கு ஆறுதல் சொல்லி, கண்டனத்தை பதிவு செய்தது ஏ.பி.வி.பி.-க்கு பெரும் எதிர்வினை தந்தது.

அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. செய்தி தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தின் மாணவர்களை தடுத்து நிறுத்தி, பா.ஜ.க. அரசின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை பொது வுடமை கட்சிகள் உள்பட தி.மு.க. மற்றும் பல்வேறு ஜனநாய முற் போக்கு அமைப்புகள் கண்டித்தன.

இந்நிலையில், ஜெ.என்.யூ. பல் கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மீது இனவெறித் தன் மையோடு, கொலைவெறி தாக்கு தலை ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்தி யுள்ளது. மேலும், சமூகநீதி, பெண் ணுரிமை, ஜாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு என்று சமூக சீர்த்தி ருத்தத்தை, சமத்துவத்தை ஏற் படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியாரின் படத்தையும், பொது வுடமை தலைவர்களின் உருவப் படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, ஹிந்துத்துவா அரசியலை ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏ.பி.வி.பி. அமைப்பு.

உலகத்தில் எந்தஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு, இன்னல் ஏற்படுமாயின் அதனை கண்டித்தும், தமிழர்களுக்கு கை கொடுத்து உயர்த்தும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையேற்று, கழக இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒன்றிணைந்து பா.ஜ.க. வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு, தமிழ் மாண வர்களின் மீது நடத்தியுள்ள கொடுந்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது.

மாணவர்கள் மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு விவாதிப் பதும், கருத்தியல் போர் நடத்திட வேண்டுமென்பது அரசியல் மாண் பாகும். ஆனால், வெறுப்பு அரசிய லையும், வெறிகொண்ட தாக்குத லையும் தன் சித்தாந்தமாய் கொண் டிருக்கும் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு குண்டர்களாய், ரவுடிகளாய் மாறி டில்லியில் பயிலும் தமிழ் மாண வர்களை தாக்கியிருப்பதற்கு அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும். தமிழ் மாணவர்கள் டில்லியில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தி.மு.கழகம் என்றென்றும்,   தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்து தந்துள்ள அறவழியில் அறிவாயுதம் ஏந்தி போரிடுகிறோம். சமூகநீதி, பெண் ணுரிமை, மொழி உரிமை, ஜாதி மறுப்பு, மதநல்லிணக்கம், சமத்து வம் ஆகிய கொள்கைகளை பா.ஜ.க.வின் தலைமைபீட செவிப் பறை கிழியும் வரை எதிரொலித்துக் கொண்டே இருக்கும். உடைக்கப் பட்ட தந்தை பெரியாரின் உருவப் படம் அங்கு மீண்டும் புதியதாய் காட்சியளிக்கிறது!

மேலும், விரைவில், டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத் தரங்கு பரப்புரையை தொடங்க விருக்கிறோம்.

டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும், தமிழ்நாட்டு மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தி யிருக்கும் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல் கலைக் கழக நிர்வாககமும், டில்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், தமிழ்நாட்டு மாணவர் களுக்கு தி.மு.க.  தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆதர வாய் களமாட தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும்!

-இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment