தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒன்றிய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி கடிதம்

சென்னை,பிப்.23-  தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத் திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் மூலம் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை தூண்டும் ஏ.பி.வி.பி அமைப்பினருக்கு பா.ஜ.க அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டும் உள்ள நிலையில், தற்பொழுது தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்தி யுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பாக கருத் தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். அப்போது கூட் டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி யுள்ளனர்.

இதனைத் தடுக்கச் சென்ற மாண வர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இத்தாக்குதலில் மாணவி களையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை. பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த அவலமான நிலை பல் கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று மதவாத வெறித் தனத்துக்கு துணை போகின்ற வெட்கக்கேடான நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின்கீழ் இயங்கும் கல்வி நிறு வனங்களில் மதவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வரு கின்றன.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்க அலுவலகத்திற்குள் புகுந்த ஹிந்துத்துவா மதவெறிக் கும்பலின் தாக்குதலில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம் பந்தப்பட்ட மாணவர்கள் பல் கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக் கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது வழக் குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழு வதும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங் களைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களைத் தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது,

 அகில பாரதிய வித்யார்த்தி பரி ஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன், ஆராய்ச்சி மாணவர்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதலை நடத்திய துடன் தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகிய தலைவர்கள் படங்களைச் சேதப்படுத்தி உள்ள னர். காயமடைந்த தமிழ் நாசர் என்னும் மாணவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பிறகும் தாக்கப்பட்டுள் ளார். இந்த தாக்குதல் நடந்த போது டில்லி காவல்துறையினர் வன் முறையை தடுக்கத் தவறியதோடு பார்வையாளர்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இப்படிப்பட்ட தாக்குதல் நடத் தப்பட்டிருப்பது முதன்முறையல்ல. தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-இவ்வாறு அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment