ஆளுநருக்கு அர்ப்பணம்! ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

ஆளுநருக்கு அர்ப்பணம்! ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

மதுரை, பிப். 8- மதுரையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி - முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26), பசுபதி (25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 26 வயதுடைய குணசீலன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அவர் அலைபேசியில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர், நாளடைவில் அதற்கு முழுமை யாக அடிமையாக தொடங்கியுள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லாமல் பணத்தையும் ஆன்லைன் ரம்மி மூலமாக இழந்துள்ளார். இதனையடுத்து குணசீலனின் தம்பி பசுபதி அண்ணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனை அடைக்க கொடுத்ததோடு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்து வந்து பணியில் சேர்த்துள்ளார்.

அங்கு கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்த குணசீலன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் மேலும் அதிக அளவிலான பணத்தை இழந்த குணசீலன் பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதனால் கடனாளியான அவர், வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாதது குறித்து தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். மேலும் கடும் மன அழுத்தத்துக்கும் ஆளாகி உள்ளனார்.  இந்த நிலையில், அவர்  தங்கியிருந்த வீட்டில் 6.2.2023 அன்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்த குணசீலன், கடைசி செமஸ்ட்டர் எழுதமலேயே இப்படியொரு நிலையை தேடிக்கொண்டது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment