ஓவியர் து.தங்கராசுவின் 'திராவிட மாடல்', 'கலைஞருடன் உரையாடுங்கள்' நூல்கள் வெளியீட்டு விழா -மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசளிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

ஓவியர் து.தங்கராசுவின் 'திராவிட மாடல்', 'கலைஞருடன் உரையாடுங்கள்' நூல்கள் வெளியீட்டு விழா -மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசளிப்பு!

தமிழர் தலைவர் ஆசிரியர் 'திராவிட மாடல்' நூலினை வெளியிட்டு சிறப்புரை

தஞ்சை, ஜன.30 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் து.தங்கராசு தொகுத்த ''திராவிட மாடல்'', ''கலைஞருடன் உரையாடுங்கள்'' ஆகிய நூல்கள் வெளி யீட்டு விழா 21.01.2023 அன்று மாலை 6 மணி அளவில் உரத்தநாடு எம்.ஆர். திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவரையும் துளசி அசோசியேட் உரிமையாளர் பூவத்தூர் 

சோ.ராஜமாணிக்கம் வரவேற்று உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமை ஏற்று உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இப்புத்தக வெளியீட்டு விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

ஒரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் ஜெகநாதன். சி.பி.அய்.(எம்) ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அ.மணிவண்ணன், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் மணவழகன், திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், உரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம். திரா விடர் கழக மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட தலைவர் அமர்சிங், மண்டல தலைவர் அய்யனார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்,ராமச்சந்திரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, ''கலைஞருடன் உரையாடுங் கள்'' நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன் நூல்களை ஆய்வு செய்து ஆய்வுரை நிகழ்த்தினார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ''திராவிட மாடல்'' என்னும் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். வெளியிடப்பட்ட இரு நூல்களின் தொகுப்பாசிரியர் ஓவியர் து.தங்கராசு ஏற்புரை வழங்கினார். 

இறுதியாக பாப்பாநாடு சேகர் மெடிக்கல்ஸ் உரிமை யாளர் து.குணசேகரன் நன்றியுரை கூறினார்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, துணைத் தலை வர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

ஓவியர் தங்கராசுவின் அண்ணன் ரங்கசாமி-மனரோஜா ஆகியோரது பேரன், மதியழகன் மகன் சரண். ஆம்பலாப்பட்டு இலுப்பை தோப்பு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவரான  இவர் அகில இந்திய அளவில் டில்லியில் நடைபெற்ற 40 கிலோ எடை பிரிவில் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

திருவண்ணாமலை அரவிந்தர் வேளாண் கல்லூரி யில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கோவிலூர் ரங்கசாமி - பஞ்சநதி ஆகியோரது பேத்தியும் ஒன்றிய திராவிடர் கழக இளை ஞரணி துணைத் தலைவர் சதீஷ்குமார்-ராதா ஆகி யோரது மகள் ச.நிதிஷா கபடி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 

ஓவியப் போட்டி

இந்த புத்தகங்களின் தொகுப்பாசிரியர் ஓவியர் 

து.தங்கராசு ஒருங்கிணைப்பில் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை” முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண் டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக் கிடையேயான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 

ஓவியப் போட்டி தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களான மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திறன் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், இல்லம் தேடி கல்வித் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 விலை குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 3 விலை குறைப்பு, நோயற்ற வாழ்விற்கு மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் குழு வங்கிக் கடன் ரூபாய் 2,755 கோடி மற்றும் 4,800 கோடி கடன் தள்ளுபடி, உழவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச மின்சாரம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,000 கரோனா நிவாரணத் தொகை, ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், கலைஞர் பிறந்த ஜூன் 3 அன்று 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு, பொங்கல் பரிசாக 21 வகையான மளிகை பொருட்கள் + ஆவின் நெய் வழங்கல், 

12 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லுக்கான ஊக்கத் தொகை வழங்கியது. அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல், பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சி, கலைஞரின் நவீன மேம்பாட்டு ஆட்சி, காமராஜரின் கல்வி வளர்ச்சி, ஜீவா விரும்பிய சமத்துவம், திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரைந்து, போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் தந்தை பெரியார் படம் வழங்கப் பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்: தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட விவசாயணி செயலாளர் பூவை.இராமசாமி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாத்துரை, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராசு, ஒன்றிய துணை செயலாளர் இரா.சுப்ரமணியன், பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக்கண்ணு, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செய லாளர் முனைவர் வே.இராஜவேல், நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.இரமேஷ், உரத்தநாடு நகர இளை ஞரணி செயலாளர் ச.பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் சதீஷ்,     கண்ணந்தங்குடி கீழையூர் கிளைக் கழக தலைவர் இரா.செந்தில்குமார், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, பொதுக்குழு உறுப்பினர் கு.ஜெயமணி, நெடுவை கு.லெனின் திராவிட முன்னேற்ற கழகம் மாவட்டக்குழு உறுப்பினர் சுபா ஆனந்தன்,   புலவங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாநல்.மெய்கப்பன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அனைத்து கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ''திராவிட மாடல்'', ''கலைஞரோடு உரையாடுங்கள்'' ஆகிய புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

No comments:

Post a Comment