ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

ஒற்றைப் பத்தி

அய்சக் நியூட்டன்

தனக்கு முற்பட்ட காலத்தில் கடவுளால் சாத்தியமானவை என்று கூறப்பட்ட அனைத்தையும் அவை இயற்பியலால் சாத்தியமானவையே என்று சான்றுகளோடு மாற்றிக்காட்டியவர் அய்சக் நியூட்டன்

மிகவும் கடுமையான மதக்கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அய்சக் நியூட்டனின் தந்தை, அவர் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் அவரது தாய்வழி மாமா வில்லியம் அய்ஸ்கோவிடம் வளர்ந்தார், அவரது மாமா விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். ஆகையால் தனது சிறுவயது முதலே நியூட்டனுக்கும் அறிவியல் ஆர்வம் வந்துவிட்டது கடிகாரங்கள், காற்றாலைகள் மற்றும் தொழில்நுட்ப பொம்மைகள்போன்றவற்றின் செயல்பாட்டை வியந்து தனது மாமாவிடம் கேட்டு அறிந்துகொண்டார் 

நியூட்டனின் மாமா அவருக்கு முன்பு வந்த இயற்பியலாளர்களான கலிலியோ, டெஸ்கார்ட்ஸ் போன்றவர்களது வரலாற்றை படிக்க வைத்தார். அதே போல் அவரது ஆசிரியர் அய்சக் பாரோவும் அவரது அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார்

பள்ளிப் படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை பல கோணங்களில் சிந்திக்க ஆரம்பித்தது. நவீன கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் கண்டுபிடித்தார். பைனாமியல், தியரம் மற்றும் கால்க்குலஸ் எனும் நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார். 

நியூட்டன் ஈர்ப்பு விதிகளை எப்படி உருவாக்கினார் என்ற கேள்வி எழும். அது 1665. நியூட்டன் விடுமுறையைக் கழிக்க தம்முடைய சொந்த ஊரான ‘வுல்ஸ் தார்ப்’ என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தார்.

ஒரு நாள் காலை வீட்டின் புழக் கடைப்பக்கம் இருந்த ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந் தார். அப்போது மரத்திலிருந்து ஓர் ஆப்பிள் பழம் தரையில் விழக் கண்டார். அது ஏன் மேல் நோக்கியோ அல்லது இடப்புறமாகவோ, வலப்புறமாகவோ விழவில்லை என்ற கேள்வி எழுந்தது அவருக்குள். பூமியின் ஏதோ ஓர் ஈர்ப்புதான் அதற்குக்காரணம் என்று அவரு டைய தர்க்கமனத்துக்குத் தோன்றியது. அவர் அவ்விதமாய் கருத்தூன்றிக் கவனித்து ஒரு முடிவுக்கு வந்த போதுதான் ‘புவியீர்ப்பு விதி’ உருவானது. ட்ரினிட்டி கல்லூரியில் அவருடைய ஆசிரியராயிருந்த அய்சக் பாரோ கூறுவார், ‘நியூட்டன் வரைபடம் எழுதுவதிலும், இயந்திரம் சார்ந்த கண்டுபிடிப்புகளிலும் அசாதாரண திறன் பெற்றவர்’ என்று.

இயற்கையின் அநேக புதிர்களை நியூட்டன் விடு வித்திருக்கிறார். சூரிய ஒளியை ஒரு கண்ணாடிப் பட்டகத்தின் (prism) வழியே ஊடுருவச் செய்தால் நிறப்பிரிகை ஏற்பட்டு ஏழு வண்ணங்கள் (ஊதா, இந்திர நீலம், நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு) தோன்றும் என்பதை அவர் உலகுக்கு எடுத்துக் காட்டினார். ஏழு வண்ணங்களாலான ஒரு வட்டத்தட்டைச் சுழற்றி அது சுழலும்போது வெண்மையாய் தெரிவதையும் அவர் காண்பித்தார். வான்வெளியில் நடப்பவைகளைக் கண்டறிய ‘டெலஸ் கோப்’ என்ற சாதனத்தையும் அவர் கண்டுபிடித்தார்.

1727 மார்ச் 20-ஆம் நாள் காலமான நியூட்டனின் கல்லறையில் இப்படியொரு வாசகம் பொறிக்கப்பட் டிருக்கிறது, ‘விலைமதிக்க முடியாத, மிகச் சிறந்த மனிதகுல மாணிக்கம்’ என்று.

இன்று நியூட்டன் பிறந்த நாள் (1643).

 -  மயிலாடன்


No comments:

Post a Comment