தருமபுரி,ஜன.10- வெங்கடசமுத்திரம் பெரியார் பெருந்தொண்டர். இறுதிவரை தந்தை பெரியார் கொள்கையுடன் சுயமரி யாதையோடு வாழ்ந்து காட்டிய வி.ஆர். வேங்கன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை யாற்றினார்.
தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பெரியார் பெருந்தொடரும் ஒன்றிய பெருந் தலைவருமான வி. ஆர். வேங்கன் அவர் களின் படத்திறப்பு நிகழ்ச்சி 9.1.2023 திங்கட் கிழமை பாப்பிரெட்டிப்பட்டி நாராயணசாமி திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது. வி.ஆர். வேங்கன் அவர்களின் மகன் வே.தமிழ்ச்செல்வன் வரவேற் புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, செயலாளர் பீம.தமிழ்.பிரபாகரன், அமைப் பாளர் சி. காமராஜ், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட தலைவர் பெரு.முல்லையரசு, பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மா.மாரி, பகுத்தறிவாளர் கழக துணைத் தலை வர் கு.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
சுயமரியாதைச் சுடரொளி வி .ஆர். வேங்கன் அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் உயர்கல்வித்துறை மேனாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செய லாளர் தடங்கம் பி. சுப்பிரமணி, கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில தி.மு.க. தீர்மான குழு செயலாளர் கீரை .விஸ்வநாதன், மாநில ம.தி.மு.க.கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியதேவன்,மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், டாக்டர் எம்.என். முருகேசன், டாக்டர் தி.பழனிசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சின்னப்பன் மற் றும் பலர் வி.ஆர். வேங்கன் அவர்களுக்கு புகழுரை நிகழ்த்தினர். கழக மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
படத்திறப்பு நிகழ்ச்சியில் சேலம் பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன்,சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணி, தருமபுரி பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தீர்த்தகிரி, இரா.வேட்ராயன், க.கதிர், மண்டல செயலாளர் பழ. பிரபு, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த. அறிவரசன், மாவட்டத் துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம், மாவட்ட செயலாளர் க.மாணிக்கம், நகர தலைவர் தங்கராஜ், ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மா.செல்லதுரை, ஓமலூர் ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் தீ.சிவாஜி, தமிழ்செம்மல் கவிஞர் கண்ணிமை, சி.அழகிரி, இரா.இளங்கோ, இராமகிருஷ்ணன், சேலம் நகர செயலாளர் வைரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா. இராஜேந்திரன், செயலாளர் கதிர் செந்தில், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, பூங்குன்றன், விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் கா. சின்னராஜ், சுதாமணி, நடராஜன் கோ குபேந்திரன், கோ. தனசேகரன், குருபரஅள்ளி.பெ.அன்பழகன், வெண்ணிலா அன்பரசன், திராவிடன், திமுக நிர்வாகிகள் இரா. சித்தார்த்தன் சரவணன் ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன்,இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள் சாய் குமார் தென்றல் பிரியன் சிற்றவன் நாச்சியப்பன் வினோ விக்னேஷ் வசந்த் வருண் பார்த்தசாரதி வசந்த பிரியன் சக்திவேல் சக்தி பிரியன் அய்யனார் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி ஊற்றங்கரை சேலம் பகுதி தோழர்களும் பாப்பிரெட்டிபட்டி அனைத்துக் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் இராஜவேங்கன் நன்றி கூறினார்.
வி.ஆர். வேங்கன் அவர்களின் குடும்பத்தினர் பிரேமா, தனலட்சுமி, தென்னரசி, அழகிரிசாமி, கவுதமன், சுஜாதா, நிர்மலா, புகழ் மங்கை, ரமணி, பூவிழி, செந்தில்குமார், ராணி, பாரத் கண்ணகி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment