ஈரோடு கிழக்கு - இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

ஈரோடு கிழக்கு - இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி

சென்னை, ஜன.20 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைந்ததைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27-இல் அங்கு இடைத்தேர்தல் நடை பெறுகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே, இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அளிக் குமாறு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளிடம் வலியுறுத்தினோம். இந்நிலை யில், தற்போது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment