திருச்சி, ஜன. 4- திருச்சி சிறீ ரங்கம் கோயிலின் இணை ஆணையருக்கு மிரட்டல் விடுத்த பாஜகவினர்மீது காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு இந்து சமய அறங்காவல்துறையின் இணை ஆணையர் வீட் டுக்கே சென்று அச்சுறுத் திய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று (2.1.2023) அதிகாலை நடை பெற்றது. இதில் பங்கேற்க கோயில் நிர்வாகம் சார் பில் பலருக்கு விஅய்பி பாஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறீரங் கம் பகுதியைச் சேர்ந்த பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திருவேங்கடம் யாதவ், மேனாள் ராணு வத்தினர் பிரிவு மாவட் டத் தலைவர் மிலிட்டரி நடராஜன், மண்டலத் தலைவர் சதீஷ் உள்ளிட் டோர் 1.1.2023 அன்று கோயில் இணை ஆணை யரான மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று தங்க ளுக்கு ஏன் விஅய்பி பாஸ் வழங்கவில்லை எனக் கேட்டதாக கூறப்படுகி றது. அதற்கு அவர் ‘அலு வலகத்துக்கு வாருங்கள். பேசிக் கொள்ளலாம். வீட்டுக்கெல்லாம் வரக் கூடாது’ என பதிலளித்த தாக தெரிகிறது. இத னால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவேங்கடம் யாதவ் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக வும், அரசுப் பணி செய் யவிடாமல் தடுத்ததாக வும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து சிறீரங்கம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவேங் கடம் யாதவ், மிலிட்டரி நடராஜன், சதீஷ் உள் ளிட்ட பாஜக நிர்வாகி கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment