சென்னை புத்தகக் காட்சி நிறைவு: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

சென்னை புத்தகக் காட்சி நிறைவு:

தந்தைபெரியார் கொள்கை தாங்கிய புத்தகங்களுக்கு 

இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே மாபெரும் வரவேற்பு

சென்னை, ஜன. 23- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 46ஆவது சென்னை புத்தகக் காட்சி யை  கடந்த 6.1.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் தொடங்கிவைத்தார்.

நேற்றுடன் (22.1.2023) நிறைவு பெற்றுள்ள புத்தகக்காட்சியில் இந்த ஆண்டு ரூ.16 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 24 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சியை 15 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். புத்தக விற்பனையும் ரூ.16 கோடி வரை நடைபெற்றதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவ னத்தின் புத்தக அரங்கு எஃப் 18இல் தந்தை பெரியார் முழு உருவச்சிலைஅமைக்கப்பட்டு புத்தகங்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டி ருந்தன.

இந்த காலக்கட்டத்தில் தந்தைபெரியாரின் கொள்கைகளுக்கான அவசியம் கருதி இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வமு டன் அரங்கில் குழுமியிருந்தனர். தந்தை பெரியார் உருவச்சிலை அருகில் சுய படம் (செல்ஃபி) எடுத்து வரலாற்றுப் பதிவுகளாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

உணர்ச்சிப் பெருக்குடன்

ஆட்சி அதிகார ஆணவத்துடன் நாடு முழுவதும் வகுப்புவாதம் தலைதூக்கும் இந்த காலக்கட்டத்தில், சனாதன, வருணாசிரம பிற் போக்குத்தனங்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது என்கிற உணர்ச்சிப்பெருக்குடன் இளைஞர்கள் கொள்கைத் தேன் தேடும் வாசக வண்டுகளாக அரங்கில் குவிந்தனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கொள்கை உறவுகளாகத் திரண்டனர்.

பொங்கல் விடுமுறை நாளையும் முறையே பயன்படுத்திக்கொண்டு கடந்த 16.1.2023 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கு எஃப் 18இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, புத்தகங்களில் கையொப்பம் பெற்று மகிழ்ந்தனர். பலரும் தமிழர் தலைவருடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு வரிடமும் நலம் விசாரித்ததும், குழந்தைகளி டம் பாசமிகு தாத்தாவாக அன்பு காட்டியதும் பார்ப்போரை நெகிழ்ச்சியுறச் செய்தது.

வரலாறு படைத்தது

திராவிடர் கழக இயக்க வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவும் இந்த ஆண்டின் புத்தகக்காட்சியில் வரலாறு படைத்தது.

மத வாத, ஜாதிய வாத நஞ்சுக்கு ஒரே மருந்து, தடுப்பு மருந்து தந்தைபெரியார் கொள்கைகள்தாம் என்பதை கட்சி, அரசிய லுக்கு அப்பாற்பட்டு வாசகப் பார்வையா ளர்கள் காலத்தே உணர்ந்து தந்தைபெரியார் கொள்கைகள் தாங்கிய புத்தகங்களை ஆர் வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

புத்தகக்காட்சிக்கு வருகைதந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்பு களின் பொறுப்பாளர்கள் என பலரும் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத் தின் புத்தக அரங்கு எஃப் 18இல் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் புத்தகங் கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

அண்ணல் அம்பேத்கர், பன்னாட்டு பகுதறிவாளர்கள், அறிஞர் பெருமக்களின் புத்தகங்கள், சமூக நீதி, வகுப்புரிமை, பெண்ணுரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மாநில உரிமைமீட்பு உள்ளிட்ட மனிதநேயம் போற்றும் கொள்கைகளைத் தாங்கிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிச் சென்றனர்.

நடப்பாண்டு குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், வரலாற்று நூல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கண் காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாகப் பங் கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத் தாளர்கள், தமிழர்கள் எனப் பலரும் இந் தாண்டு மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

திருநங்கையர்

கண்காட்சியின் சிறப்பம்சமாகத் திருநங் கையர் நடத்தும் பதிப்பகத்துக்கும், தமிழ்நாடு சிறைத் துறைக்கும் தலா ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டது. இதில்சிறைத் துறைக்கான அரங்கத்தில் வாசகர்கள் கொடையாக வழங் கியதன் மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக சுமார் 22 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன.

எனினும், மற்ற மாவட்டங்களிலும் புத்த கக் காட்சிகள் நடத்தப்படுவதால் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும் சில பதிப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், இதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியும் வெற்றிகரமாக அமைந்தது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment